பகுதி -59

2.9K 113 6
                                    

"உண்மையான
சொத்துகள்
எதுவெனில்
அன்பான உறவுகள் மட்டுமே.."

ரோகிணி ஜோகித் மறந்த ஒவ்வொன்றாக கூறினாள்.

"பட்டு நானா உனக்கு முத்தம் கொடுத்தேன்... "என்று ஜோகி கேட்க..

"ஆமா எப்ப பார்த்தாலும்... தான் நீ ஜோகி மாதிரி இருந்தால் தப்பிச்ச... இல்லைன்னா" என்று கையை சூடாக தேய்தாள்.

"செஞ்சாலும் செஞ்சு இருப்பேன் பட்டு..நீ தான் என் பட்டுவாச்சே.. "என்று மீண்டும் ரோகிணியை நெருங்கினான்.

"டேய் கிட்டவராதே.."  என்று பின்னால் ரோகிணி செல்ல..

"இப்ப உன்னாலே எதுவும் பண்ணவே முடியாது... ஏன்னா இங்க நீயும் நானும் மட்டும் தான்..."என்று ஜோகித் நெருங்கினான்.

"நாம் ஹாஸ்பிட்டல் போகனும் மறந்துட்டியா.. இது எல்லாத்தையும் அப்புறம் வந்து வச்சுக்கலாம்... வா "என்று ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றாள் ரோகிணி.

ஹாஸ்பிட்டலில்.

"ராபர்ட் இப்போ எப்படி இருக்கு "என்று ரோகிணி கேட்க..

"இப்போ ரொம்ப பைன் ரோகிணி.. என் சிரித்தான்.

"எங்க ஜோகி வரலையா.. "என்று ராபர்ட் கேட்க..

"ஜோகி காரை பார்க் பண்ணிட்டு வரேன்னு போய் இருக்கான் " என்று ரோகிணி... ராப்ரட்டிற்காக வாங்கி வந்த பழங்களை அருகில் இருந்த மேசையில் வைத்தாள்.

"ஹாய் டூட் " என்று அறையின் உள்ளே நுழைந்தான்.

"ஸாரி ராபர்ட் என்னால்  தானே உனக்கு இந்த வலி "என்று அருகில் அமர்ந்தான்.

"இல்லை ஜோகி.. இது எனக்கு தேவையான ஒண்ணு தான்.. இன்னும் இரண்டு நாள் அப்புறம் சரியா போயிடும்.." என்று சிரித்தான் ராபர்ட்.

"எங்க வித்யா மேடம் காணோம்.. ?" என்று ரோகிணி கேட்க..

"மம்மியும் டாடியும் ரூம் வரைக்கும் போய் இருக்காங்க பிரஸ் ஆக.. முன்னாடியே கிளம்பிட்டாங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க..." என்று ராபர்ட் கூற..

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن