"உன் எண்ணங்கள்...
நல்லதாய்
அமைந்தால்...
நீ செல்லும் பாதையும்..
சரியாக அமையும்..."அவனது திசையை மாற்ற எண்ணினாள் ரோகிணி..
"நான் இங்க என்னோட பிரண்ட் மேரேஜ்க்கு வந்தேன்... சரியா...இப்படி நீங்க என்கிட்ட நடந்துக்கிறது சரியில்லை..".என்று ரோகிணி கவனத்தை திருப்பினாள்.
"உனக்கு பிரண்டா அதுவும் இந்த ஊர்லேயா...
""ஏன் மிஸ்டர் எனக்கு பிரண்ட் இருக்க கூடாதா...என்ன...?
"என்று ரோகிணி கேட்க..."அதுக்கு இல்லை இந்த ஊர்ல யாரை பார்க்க வந்தீங்க...
""இந்த ஊர் மொத்தமும் நீங்க தான் வாங்கி இருக்கீங்களா... வழிய விடுங்க..."என்று அவனை விலகினாள் ரோகிணி.
"ஊர் மொத்தமும் வாங்கவே இல்லை ஆனா உன்னை மட்டும் ழுழுசா நான் வாங்கி இருக்கேன்...
""அப்படியா ...! மிஸ்டர்... பட் அதுக்காக நீங் கேட்கிறதுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிட்டு இருக்க முடியாதே... உங்ககிட்ட யார் விற்றாங்களோ அவங்க கிட்ட போய் கேட்டுக்கோங்க" என்று வயல் வரப்பில் நடந்தாள்.
"கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டீங்கறீயே..."என்று ஜோகியும் அவளை பின் தொடர்ந்தான்.
"எப்பவுமே என் சம்பந்தம் பட்ட விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது நினைக்கிறேன் குறிப்பா உனக்கு... அதான் உனக்குன்னு ஒரு பொண்ணு வந்து இருக்கா அவ பின்னாடி போய் சுத்து எதுக்கு ஏன் பின்னாடியே சுத்தி சுத்தி வர...
"என்று ரோகிணி கூற..."என் அழகி எங்க இருக்காளோ அங்க தானே வர முடியும்... அதுவும் என் அழகிய தேடி நான் போகலையே... அவ தானே தேடி வந்து இருக்கா..
" என்று ஜோகி கூற.."வாட் யூ மீன் " என்று அவனிடம் திரும்பினாள் ரோகிணி.
"வெல்கம் பார்ட்னர்...
"
"வாங்க ராபர்ட்.."என்று இருவரும் கை குழுக்கி கொண்டனர்."ஏன் நீங்க இங்க தங்கி இருக்கீங்க நம்ப வீட்டுலேயே வந்து இருக்கலாமே...! "என்று அவனது பார்டனர் கேட்க...