“தாகங்கள் பல
கொண்டேன்
உன்னால்...
இருப்பினும்
உன் அணைப்பின்
தாகம்... தீராதது”...காற்று இதமாய் வீச... குளிர் காற்று அவர்களின் அணைப்பை இன்னும் அதிகமாக்கியது... அவனின் பிடியில் மயக்கிக் கிடந்தாள் ரோகிணி. எவ்வளவு நாட்கள் இந்த அணைப்பின் தாகம் தீர..
என் ஜோகித் என்னிடம்... இவன் அணைப்பில் இனி வாழ்வேன் என்றது ரோகிணியின் மனது எப்படி இது சாத்தியமாகும்.
' ரோகிணி என்ன செய்கிறாய் நீ...? ம்ம்ம்...' அவனிடம் இருந்து சடார் என்று விலக முயன்றாள். ஆனால் அவன் பிடி இரும்பாய் இருந்தது.
'எப்படி இது சாத்தியமாகும்...? ஜோகித் இறந்து வருடங்கள் ஓடியது.. ஆனால் எப்படி ம்ம்ம்...' ஒருநிமிடம் தனது அத்தனை பலங்களையும் ஒன்றாக திரட்டி அவனிடம் இருந்து விலகினாள்...
தன்னிலை வந்தவன்... என்ன ஆச்சு என்று பிறகே உணர்ந்தான். அவனுக்கு பதட்டம் கூடியது ' என்ன ஜோகித் .... ?இது முன்பின் தெரியாத பெண்ணிடம் இப்படியா எல்லை மீறுவது' என்று மனசு அவன் தப்பை சுட்டிக் காட்டியது.
"ஸாரி மேடம் ஸாரி ஸாரி ஐ கிராஸ் மை லிமிட் இஸ் மை மிஸ்டேக்...
" என்று அவளை விடுவித்தான்.
அவன் பேசும் வார்த்தை ஒவ்வொன்றாக உன்னித்து கவனித்தாள்... ஜோகித்தின் குரல்...என்னை காதல் மயக்கத்திற்கு ஆட்கொண்ட அதே குரல். அவனது முகம் எதுவும் மாறவில்லை இருப்பினும் அவள் மனது அதை ஒத்துக் கொள்ள மறுக்கவில்லை..
"ஹலோ மேடம்...! ஐ யம் ரியலி ஸாரி திஸ் ஐஸ்ட் ஆக்ஸிடெண்ட்...
"
அப்போது நினைவிற்கு வந்தவள் “நீங்க ஜோகித் தா”
"எஸ் மேடம்.. ஐயம் ஜோகித் ... நீங்க என்னோட ரசிகையா... உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம் "என்று அவன் கைகளை நீட்ட அவளின் உடம்பு முழுவதும் ஆச்சரியத்தில் சிலிர்த்தது. அவளுக்கு மயக்கமே வந்துவிடுவது போல் ஆகியது.. கைகளை நடுக்கத்துடன் அவனிடம் நீட்ட...அப்போது ...அவனது மொபைல் ரிங் ஆகியது.. "ஸாரி ஜஸ் எ மினிட்..." என்று சாலையின் இருபுறத்தையும் பார்த்துக் கொண்டே பேசினான்...
"யா சொல்லுங்க நீங்க வந்துட்டீங்களா..?
"என்று ஜோகித் கேட்க...
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)