“ காதல் செய்யும்
மாயம்..
யார் அறிவாரோ...? “ரோகிணி.. என்று மெல்ல அவளது கன்னத்தை தட்டினான்.
எழவில்லை...அவள் தூங்கும் அழகை ரசித்தவன்... அவளது முடியை கோதிவிட்டான். நான் இல்லாமல் எவ்வளவு வருத்தங்கள் உனக்கு.. உடலை இப்படி வருத்திக் கொண்டு...உன்னையும் ஏன் வருத்திக் கொள்கிறாய் கண்மணியே..,உடலை கவனித்துக் கொள்ளதா அளவிற்கு சிறுபிள்ளையாய் இருக்கிறாயே ரோகிணி.
ரோகிணியின் நெற்றியின் முத்தமிட்டவன்... அவளை பூங்குவியாய் தாங்கினான்... தன் மடியில் படுக்க வைத்தான். உன்னை என் மடியில் தாங்கி எவ்வளவு வருடம் ஆகிவிட்டது.
யாரோ தன்னை அழைப்பது போல் இருப்பதை அறிந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் கண் விழிந்தவள்.
கண்விழித்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜோகித்தின் முகம்... ரோகிணியின் தூக்கம் தொலைந்துப் போகியது." .ஏன்டா என்னைய விட்டுட்டு போன" என்று எழுந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
" ரோகிணி நீ ஏன் இப்படி இளச்சு போயிட்ட... என்ன நினைச்சு நீ ஏன் இப்படி மாறிட்ட... சரியா சாப்பிட கூட முடியாம...
உன்னை இப்படி பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ரோகிணி" என்று வேதனைப்பட்டான் ஜோகித்."ஜோகி ..! " என்று அழுதாள் ரோகிணி.
" ஏன் ...? டா என்னைய விட்டுட்டு போன...வான்னு கண்ணால சொல்லி இருந்தா...நானும் கூடவே வந்து இருப்பேன் என்று ரோகிணி கூற..அழுகையோடு ரோகிணியை தன் பக்கம் திருப்பியவன் " இப்ப நான் உன் கூட தானே இருக்கேன்...ரோகிணி நான் உன்னைய விட்டு போயிட்டேன்னு நீ ஏன் நினைக்கிற..
? "அவளது கண்களைத் துடைத்தவன்... தனது இதழ்களால் முத்தம் பதித்தான். அதன் குளிர்ச்சியை உணர்ந்தவள்... இமைகளை மூடினாள்.. அழுது வீங்கிய கண்களுக்கு இதமாய் மாறியது..
"ஜோகி " என்று உருகினாள் ரோகிணி.
ரோகிணி என்று தனது கைகளினால் வருடிக் கொடுத்தான்.
ஓர் நிமிடம் அவளை ரசித்தவன்.
