சண்டையிட காத்திருக்கும்என்
அழகியே...
உன்னை நான்
என்று கண்டேனோ...
அப்பொழுதே
...
நீ
வென்று விட்டாய் என்னை..!
"ஹலோ மிஸ்டர்...! கை எடுக்கறீங்களா... உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல என்னால முடியாது "என்று அவனது கையைப்பிடித்து இழுக்க முயன்றாள்..
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மகி ... "அக்கா ப்ளீஸ் ஏன் இப்படி சண்டை போடறீங்க அண்ணாக்கிட்ட..?" கேட்க...
தாங்யூ மகி..என்று ஜோகித் கூற..
பதிலுக்கு புன்னகைத்தாள் மகி.
மகி " என்ன பேசற நீ நான் அவன்கிட்ட சண்டைக்கு நிக்கறேன்னா.. நீ உள்ள போ...! கொஞ்ச நேரத்துல மத்தவங்க வந்துருவாங்க நீ போய் வேலையப் பாரு.." .என்று அவளை துரத்துவதிலே குறியாக இருந்தாள்.
இது ஜோகி இல்லை என்று கண்ணால உணர்த்தினாள் ரோகிணி .. மகியோ உள்ளே சென்றாள்.
"மேடம் நான் உங்களைய விட மாட்டேன்... பதில் சொல்லற வரைக்கும்".என்று ஜோகி விடாமல் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
பொறுமையை இழந்தவள்... " சரி சொல்லறேன்... ஆனா இப்போ இல்லை... எனக்கு முக்கியாமான வேலை இருக்கு.."
" ப்ளீஸ் வழி விடுங்க... !கஸ்டமர்ஸ் எல்லாம் வருவாங்க இப்படி இருந்தா தப்பா நினைப்பாங்க...
"
என்று ரோகிணி கூற
"அப்ப சரி நீங்க கிளம்புங்க...!" என்று வழிவிட்டான்... ஷாப்பை விட்டு வெளியே வந்தவள்...
அவனும் பின் தொடர ...
"மேடம் ஆனா ஒண்ணு..என்கூட ஒரு காப்பி சாப்பிட்டு கிளம்பலாம்ல.. "என்று ஜோகி கூற...
