"காதல்
சில நேரம் கசந்தாலும்...
பல நேரம்..
திகட்டாத தித்திப்பாக மாறிவிடுகிறதே..."காதலும் சரி காலழும் சரி யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ரோகிணியின் வாழ்வில் வண்ண பூக்கள் மலரத்தான் செய்தது.
அவளை தாங்கிக் கொள்ள... ஜோகி இருந்தான். ஜோகியை தாங்கிக் கொள்ள ரோகிணி இருந்தாள். இருவரையும் தாங்கிக்கொள்ள அவர்களது காதல் இருந்தது.
காதலும் ஓர் நாள் கசக்கும் அல்லவா... கசந்தது ரோகிணிக்கு..
தனது பிளான் அனைத்தும் சொதப்பலில் முடிந்த நிலையில்... ஜோகியைப் பற்றி அறியும் எண்ணம் ரோகிணியில் தலைதூக்கியது.
கல்யாணம் ஆனால்.. அதை வைத்தாவது ஜோகியின் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தாள். அதுவும் தோல்வி... என்று ரோகிணி அந்தப் பேச்சை எடுக்கும் போது எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவளைச் சமாதானப்படுத்தி விடுவான் ஜோகி..சலித்தது விட்டது ரோகிணிக்கு.
இவனோடு வாழ்ந்த ஏழு மாதங்களும்..ஒவ்வொரு முறையும்.. அவனை அறிந்து கொள்ள எண்ணியவள்... தோற்று போனாள்.. வாய்விட்டுக் கேட்க முடிவுசெய்தாள் ரோகிணி.
"ஜோகி நீ எனக்காக எதுவேணாலும் செய்வியா..?"என்று ரோகிணி பூடகமாக பேசினாள்.
"உனக்காக என்ன செய்யனுன்னு மட்டும் சொல்லு பட்டு செஞ்சு முடிக்கிறேன்.."என்று ஜோகி கூற..
"நான் எது சொன்னாலும் மறுக்காமல் செய்யனும்.".என்று வார்த்தைகளால் அவனைப் பூட்டினாள்.
"பட்டு இதுவரைக்கும் நீ சொல்லி நான் என்ன செய்யாம் விட்டு இருக்கேன்...."என்று ஜோகி கூற..
"இருக்கு டா... உன்னுடைய குடும்பம் அதை நான் பார்க்க கூடாதா..."என்று ஜோகியிடம் ஏக்கமாகக் கேட்டாள் ரோகிணி.
ஜோகி முகம் இருண்டது.. "ரோகிணிஅதுவந்து " என்று அவன் தடுமாற...
"முன்னாடி தான்.... ஏதேதோ காரணம் எல்லாம் சொன்ன... நம்ப இரண்டு பேரையும் பிரிஞ்சுருவாங்க.. அது இதுன்னு சொன்ன... இப்போது நம்ப இரண்டு பேரையும் எப்படி பிரிப்பாங்க..".என்று ரோகிணி கூற...
