பகுதி – 11
“காதல் இல்லா வாழ்வு...
வீணடி...!
அதிலும் நீ இல்லா வாழ்வு
கொடியதடி..! “அதிர்ந்து நின்றாள் ரோகிணி. சரியாக தனது வீட்டின் முன் நின்றான் ஜோகித்.
"எப்படி உங்களுக்கு என்னுடைய வீடு தெரியும்..? கரெக்டா எப்படி கண்டுபிடிச்சீங்க...
"என்று ரோகிணி கூற..
ஹலோ மேடம் ...! " அதான் ஜோகித்தோட பவர்... இப்பயாச்சும் ஜோகி யார்ன்னு தெரிஞ்சுக்கோங்க...
""அது இருக்கட்டும் எப்படி கண்டுபிடிச்சீங்க அதை சொல்லுங்க என்று வியப்புடன் அவனையே பார்த்தால்...?
"
என்னடா இது...! "அட நீங்க வேற சின்ன விஷயம் தாங்க... உங்களுக்கு பூக்கள் ரொம்ப பிடிக்கும்...அதுமட்டும் இல்லாம நீங்க பொக்கே ஷாப் வேற வச்சு இருக்கீங்க... உங்க வீட்டு முன்னாடி இவ்வளவு பூக்களை வச்சு இருக்கீங்களே... எல்லாரும் பூ வளர்பார்ங்க தான்... ஆனா நீங்க கீழே மேலன்னு எல்லாப் பக்கமும் வச்சு இருக்கீங்களே..
"என்று ஜோகித் கூற'உண்மைத்தான்... நான் பூக்களை வளர்ப்பதை பிடித்து போகி ஜோகி பூச்செடியினால் வீட்டையே அலங்கரித்து விட்டு இருந்தான்.
'
"நீங்க முன்ன பின்ன இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்களா..?" என்று ரோகிணி கூற..என்ன இவள் இப்படி கேள்வியாய் கேட்கிறாளே என்று...நினைத்தவன்..
" விளையாடறீங்களா ... எனக்கு வழி தெரியாம நீங்க சொல்லற வழிய வச்சுத்தானே நான் வந்தேன்... எனக்கு எப்படி தெரியும்...? "என்று ரோகிணியிடம் வாதிட்டான்.
சரி சரி..! என்று அவள் தன் வீட்டிலுள் செல்ல முயன்றாள்..
"நான் வேணா வீட்டில வந்து விட்டுமா... உங்க வீட்டுல யாராச்சும் இருந்தாங்கன்னா கூப்பிடுங்க..? தனியா எப்படி போவீங்க..?
""இல்ல ..! நான் போய் போயிக்கிறேன் என்று அவனிடம் இருந்த மருந்துகளை வாங்கிக் கொண்டாள். அட்லீஸ்ட் உள்ளேயாவது வந்து உங்களை விடட்டுமா" என்று கூறியவன்..
