"தேடல்கள்
உள்ளவரை..
வாழ்கையில்..
சுவாரசியதற்கு பஞ்சம் இருக்காது."ரோகிணி தனது கனவை அடைந்துவிட்டாள்... கூடவே காதலும் கிடைத்துவிட்டது.. மறுப்பாளா..? ஏற்பாளா..?
"ரோகிணி புரிஞ்சுக்குவா...நீ உன் முயற்சியை கைவிடாதங்க தம்பி" என்று பெரியவள் நம்பிக்கை உடன் கூற
"ஆன்ட்டி ப்ளீஸ் தம்பி எல்லாம் வேண்டாம் ஜோகின்னே கூப்பிடுங்க "என்று பெரியவளிடம் உரைக்க...
சிரித்தவள்..". சரி ஜோகித் அவர்களே இப்போ என்ன செய்யப்போறீங்க...?
" என்று பெரியவள் சிரிப்புடன் கூற"நான் ரோகிணியை புரிஞ்சுக்கனும்...ஆன்ட்டி என்று இழுத்தான்.. ஜோகி..
"அதுக்கு நான் என்ன செய்யனும் ஜோகி.." என்று பெரியவள் கேட்க...
தயக்கத்துடனே கூறினான் ஜோகி "வரும்போது போர்டு பார்த்தேன்... டூ லெட்டுன்னு போட்டு இருந்தீங்க நீங்க அனுமதிச்சீங்கன்னா.. நான் இங்கேயே தங்கிக்குவேன்... வாடகை எவ்வளவு என்ன ஏதுன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்.."என்று ஜோகி கூற..
"அப்ப நீ புல் பிளான்னோட தான் வீட்டுக்குள்ள வந்து இருக்க...
" என்று பெரியவள் கூறஅப்படியும் சொல்லலாம்... ஆனா நான் வேற பிளானோடை தான் வந்தேன்.. அப்படியே வீட்டுக்குள்ள வந்து உங்க மனசுல இடம் பிடிச்சு அப்படியே ரோகிணியை இம்பிரஸ் பண்ணி... பட் அது எல்லாம் உங்களை பார்க்கிற வரைக்கும் தான்... ஏனோ உங்களைப் பார்க்கிறபோ பொய் சொல்ல தோணவே இல்லை என்றுஜோகித் உண்மையை கூற...
"ஜோகி... நல்லவங்க எப்பவும் பொய் சொல்ல வராது ... நீயும் ரோகிணிக்கு ஏற்றவன் தான் ... அவளை மாறியே இருக்கியே... "
எஸ் ஆன்ட்டி என்று சிரித்து மழுப்பினான். சரிஆன்ட்டி ரொம்ப நேரம் ஆச்சு எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பட்டுமா...? என்று ஜோகி கேட்க...
"ரொம்ப நேரமாச்சுல உன்னை பார்த்தா பேசிகிட்டு நேரம் போனதே தெரியவே இல்லை.. இரு ஜோகி நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.."என்று சென்றவளை தடுத்து