அன்பு
விலைக்கு கிடைக்காத...
ஓர் உணர்வு..."என்ன ஹீரோ ஸார் ... இங்கேயே இருக்கப்போறீங்களா...? என்ன " என்று காரின்னுள் இருந்த மதி கேட்க..
"வாட்..." என்று நிதானத்திற்கு வந்தான்.
"ஊருக்கு வர எண்ணம் இல்லையா..? நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் எக்கேஸ்மெண்ட் அதுவாது நியாபகம் இருக்கா..
"" மதி " என்று காரினுள் அமர்ந்தான் ஜோகி.
"உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா...?
""தெரியுமே ஏன் ...?கேட்கறீங்க..
""சும்மா தான்..
""ஆஹா இவள நம்பி வரலாமா என்னன்னு தானே யோசனை... ?
""அப்படி இல்லை மதி ... உனக்கு எப்படி எங்களோட ஊர் எல்லாம் தெரியும்... வா நான் டிரைவ் பண்றேன்...
"என்று ஜோகி கூற.."ஹலோ ஸார்... நான்னும் இதே ஊர்லத்தான் பிறந்து வளர்ந்து இருக்கேன்... வேலைக்காக தாற் வெளியூரே தவிர... மத்த எல்லா விஷயத்துக்கும் நம்ப ஊரு தான்...
""ஓஓஓ சூப்பர்... "என்று காரை மதி ஸ்டார் செய்தாள்... நெடுஞ்சாலையில் கார் சென்றது..
"உங்க கிராமத்தை தாண்டி தான் எங்க கிராமத்துக்கு போகனும் ஜோகி... போற வழி தான் நான் டிராப் பண்ணியறேன். " அவள் நிதானமாக கார் ஓட்டுவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஜோகி.
"என்ன அப்படி பார்க்கற ஜோகி.. இல்லை இந்த ஜீன் குர்தா போட்ட பெண்ணுக்குள்ள இன்னும் என்ன என்ன விஷயங்கள் இருக்குன்னு பார்க்கறேன்.
" என்று ஜோகி தொடர்ந்தான்."இது எல்லாம் ஓகே ஆனா இந்த கோபம் தான்.. கோபத்தை விட்டுட்டா நீ இன்னும் அழகா தெரிவ...?
""கோபமா ... ஓஓஓ நீ நான் அப்ப பேசுனதை நினைச்சுட்டு கேட்கறீயா..
""ம்ம்ம்ம் ... ஒரு சில நேரம் நல்லா பேசற எங்க ம்ம்மிய கவனமா பார்த்துக்கற... எங்க எல்லாத்துக்கும் தேவையான விஷயங்களை செய்யற...
ஆனா ....""ஆனா என்ன ஜோகி .... கஷ்டப்படுத்தறேன்னு தானே கேட்கறீங்க..."
ஆமாம் என்பது போல் தலையசைத்தான். "நேத்து தான் சொன்ன எந்த கஷ்டமும் படுத்தமாட்டேன்னு... உன்னைய என்னால புரிஞ்சுகவே முடியல...
"