பகுதி - 9
ஜோகியின் பெற்றோரை சந்தித்தப்பின் ரோகிணி முடிவு செய்து விட்டாள். என் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கியது . இனி என் மனதை மாற்ற இயலாது. குழப்பங்களால் நான் குழம்பி தவித்த காலங்கள் முடிவடைந்து விட்டது.
என்று ரோகிணிக்கு தோன்றியது.
இரவு நேர பயணங்கள் என்றாலே துள்ளி குதிப்பவள் ரோகிணி. அதுவும் ஜோகியுடன் பைக்கில் செல்வது அவளுக்கு அலாதி பிரியம்.
இப்போதும் இரவு பயணம் தான் ஆனால் ஜோகி தன்னுடன் இல்லை என்பதை வெகு நேரங்கள் கழித்தே உணர்ந்தாள்.
சென்னை... ப்ளைட் இரவு நேர தாமதம் ஆனதால்...காத்திருந்தாள்.
"என்னடா பொண்ணு இவ..?" என்று தோன்றியது ஜோகிக்கு... மதியுடன் ஷாப்பி செய்து செய்து அழுத்துப் போனான்.
முதலில் ஒரு ஷாப்பிற்குள் நுழைந்தவள்... கடையையே திருப்பி போட்டு விட்டு தான் வெளியே வந்தாள்... இன்னொரு கடை இன்னொரு கடை என்று மாற்றி மாற்றி சென்றாள்.
மதிய நேரம்... அதே ஷாப்பிங் மாலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
அவள் பின்னாடி நாய் மாறி அலைய விட்டு விட்டாளே... ? நல்ல வேளை எனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை...? இல்லை என்றால் எனக்கு எடுப்பதற்காகவே பல கடைகள் ஏறி இறங்கி இருப்பாள்.
கடைசியில உதவாத சுடிதாரை கையில பிடிச்சுடுவந்து எப்படி இருக்குது...? என்று கேட்டவளை பார்க்க கோபம் கோபம் ஆக வந்தது. நம்ப ஏதாவது சொன்னா தப்பா எடுத்துக்குவாளோ ...! என்று நினைத்தவன்...
உடனே அம்மாவிற்கு போன் செய்வாள். உடனே அம்மா எனக்கு போன் செய்வாள்... அம்மாவை நான் சமாதானம் படுத்தி அப்பாப்பா... ! அதற்கு நாம் இப்போதே சிரித்துக் கொண்டே சமாளிக்கலாம் என்று தோன்றியது.
முதலில் இவளிடம் சொல்லிவைக்க வேண்டும் எதற்கு எடுத்தாலும் தன் அம்மாவை பழிகிடாவாக மாற்றி விடுகிறாள்.
