பகுதி-32

2.3K 132 27
                                    

“வாழ்க்கை நமக்கு பல பாடங்கள் ...
தரும்
அதில் சிறந்த பாடம்..
அனுபவம்...”

"ரோகிணி நீ இப்பவே வருவேன்னு நான் நினைக்கவே இல்லை... இஸ் சோ அமேஸிங்க்.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்..
"என்று மதி கூற...

"சரி மதி என்ன தான் ஆச்சு...?" என்று ரோகிணி கேட்க...

"என்ன என்னவோ நடந்துப்போச்சு ஆனா... எல்லாம் நல்லப்படியா தான் நடந்தது ரோகிணி... உன்கிட்ட நான் சில விஷயங்களை பேசனுன்னு நினைக்கிறேன்...

சொல்லு மதி...

அதுவந்து ரோகிணி...

மதி... ஐஸ்ட் ரிலாக்ஸ்...எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல உனக்கு வரப்போறவரை பத்தி சொல்லு.....

சொல்லறேன் ஆனா ரோகிணி உன்கிட்ட... சொல்லாம எப்படி...என்று மதி திணறினாள்.

குழம்பிப் போனாள் ரோகிணி." இரண்டு நாள்ல உனக்கு மேரேஜ் சோ.. எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசலாம்...நான் இரண்டு நாளும் உன்கூடத்தானே இருக்கப் போறேன் பேசிகலாம் மதி... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... கூடவே டயர்டா இருக்கு... ப்ளீஸ் நான் பிரஸ் ஆகிட்டு வரவா... " என்று ரோகிணி கேட்க..

ரோகிணியை பார்த்தவள்.... தான் பேச நினைத்ததை கூறினாள் இவள் எப்படி தாங்கிக் கொள்வாளோ...இப்போது  தானே வந்து இருக்கிறாள்... பிறகு பேசுவோம் என்று ரோகிணிக்கு ஓர் அறையை காட்டினாள் மதி.

வீடு மிகவும் பிரமாண்டமாக இருந்தது... ரோகிணிக்கு வியப்பாகவும் இருந்தது... இவ்வளவு பெரிய வீட்டை விட்டு விட்டு எதற்காக... வேலைக்கு செல்கிறாள்.. அழகாக அமைதியாக இப்படியே இங்கு வாழந்தாள் எப்படி இருக்கும் என்று அவள் மனம் ஆசையில் மிதந்தது.

இவ்வளவு அழகான ஊரை விட்டு எதுக்கு மதி... பெங்களூர்ல வந்து கஷ்டப்படற என்று வாய் விட்டே கேட்டாள் ரோகிணி.

"போச்சுடா நீயும் கேட்டியா...? " கேட்காத ஒரு ஆள் நீ மட்டும் தான் இப்போ நீயும் மா...என்று மதி.. சொல்ல

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Where stories live. Discover now