"மறைத்து வாழ்வதை விட
மறைந்த பின்னும் வாழ்வதே
நிதர்சனம்.... "ராபர்ட் தான் கெட்ட எண்ணம் கொண்டு இருப்பதை மறைத்து ரோகிணியிடம் பழக நினைக்கிறான்.. அவனது எண்ணங்கள் படி அமையுமா..?
தான் ஜோகித்தின் நண்பன் ...! என்று அறிமுகம் செய்து கொள்கிறான்... ரோகிணியின் முகம் வியப்படைந்தது...
இவனது முகத்தை தான் எங்கோ பார்த்திருப்பது போல் எண்ணியவள்... " உங்களுக்கு இப்போ என்ன வேனும் என்று அவனிடம் கேட்க...?
"
அவள் மனதில் சந்தேகம் தான் துளிர்விட்டது. ஜோகிக்கு நண்பர்கள் இருப்பது அரிது... அவன் பல்வேறு ஊர்களுக்கு செல்பவன் நிலையான வாழ்க்கை அவன் வாழ்விலே கிடையாது... நான் மட்டும் தான் அவன் வாழ்வில் நிரந்தரமானவள் என்று அவள் மனதில் தோன்றியது."உங்களுக்கும் ஜோகிக்கும் எப்படி அறிமுகம் ...?" என்று சந்தேகத்துடன் வினவினாள்.
"அதுவந்து ரேஸிங்ல பழக்கம் மேடம்.. என்று அவன் கூற... " அவன் மீது சிறு நம்பிக்கை உண்டாகியது.
"ஜோகி இறந்ததைக் கேட்டு ரொம்ப வருத்தமா இருந்துச்சு... நான் வெளிநாட்டுல இருந்து இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் வந்தேன்... நீங்க தீடிர்ன்னு ஜோகித்தப் பத்தி விசாரிக்கவும் எனக்கு ... சின்ன சந்தேகம்...
"என்ன சந்தேகம் மிஸ்டர்...
ரோகிணி கேட்க.."ராபர்ட் னே கூப்பிடலாம் மிஸ் ரோகிணி மேடம்...
"ம்ம்ம் ..! சொல்லுங்க ராபர்ட் என்ன சந்தேகம்..." நீங்க யாருன்னு தெரியல.? ஒருவேளை ரிப்போர்ட்டரா இருந்தீங்கன்னா... ஜோகியபத்தி நிறைய விஷயங்கள் உங்ககிட்ட சொல்லான்னு வந்தேன்.. என்று தன் கற்பனை குதிரையை ஓடவிட்டான்.
"ஓஓஓ...! நான் ரிப்போர்ட்ர் எல்லாம் இல்லைங்க...
""சரி உங்களுக்கும் ஜோகியும் என்ன ரிலேஷன் நீங்க இதுவரைக்கும் சொல்லவே இல்லையே...?
""அதுவந்து ரொம்ப பர்ஸ்னல் மிஸ்டர் ராபர்ட்.. " என்று அவன் முகத்தில் அறைந்தார் போல் கூற..
