அனைத்து தோழமைகளுக்கும்...
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...************************************
“ காதல்
ஒருவரது
வெற்றிக்கும்
காரணமாய் அமையும்...
தோல்விக்கும்
காரணமாய் அமையும்... “ரோகிணி பார்த்த இடத்தில் எந்த ஒரு உருவமும் தென்படவில்லை..
"ஆனா ஜோகி இங்க தான் ஒருத்தன் இருந்தான் அவனோட முகத்தை நான் பார்த்தேன்.
"என்று ரோகிணி பயத்தில் கூற..."அது ஏதாவது பிரம்மையா இருக்கும் நீங்க வாங்க " என்று ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தான். கிச்சனிற்கு சென்று தண்ணீர் கொண்டு வந்து பருகச் செய்தான்..
அப்போது தான் ரோகிணியை முழுமையாக கவனித்தான். அவளது துணி கிழிந்த நிலையில் இரத்தம் வெளிவந்திருந்தது.
"என்ன ரோகிணி இவ்வளவு இரத்தம் வருது..?"சட்டென தனது கர்ச்சீப்பை எடுத்து அவளது கையில் வைத்து கட்டினான்.
"இவ்வளவு இரத்தம் வருது உனக்கு எதுவும் தோணல...வலி தெரியலையா...?
"
என்று ஜோகித் கேட்க"எனக்கு வலிக்கல ஜோகி நீ என்னை விட்டுட்டு போன வலிய விட இது எல்லாம் பெருசா தெரியல...?" என்று ரோகிணி கூற..
"வாட் யூ மீன் ரோகிணி...?
""ஆன் ஒண்ணும் இல்லை.." அவள் பயத்தில் ஏதோ உளறுகிறாள் என்று மட்டும் உணர்ந்தான். அங்கு இங்கு என்று அலைந்து தேடி எடுத்தான் பர்ஸ்ட் எய்டு பாக்ஸை..
"ரோகிணியின் அருகில் அமர்ந்தவன்... அவளது கையில் கிழிந்து இருந்த துணியை அகற்றினான்.. கர்சீப்பை எடுத்து சின்ஜரை வைத்து இரத்ததை துடைந்தான்.. அது தந்த வலியில் துடித்தாள்.
"ரோகிணி ஒண்ணும் இல்லை சரி ஆகிடும்" என்று மெதுவாக துடைத்து விட்டு மருத்து இட்டு கட்டு கட்டினான்.
"ஏதாவது சாப்பிடறீங்களா...?ரோகிணி..
""எதுவும் வேண்டாம் ஜோகி நீ மட்டும் என் பக்கத்துலேயே இரு.." என்று அவனை தன் பக்கத்தில் அமர வைத்தாள்.