பகுதி -48

2.2K 119 38
                                    

"உண்மையான காதல்
பிரிதலின்
வலியிலும்
புரிதலோடு ..
புரியும்.."

"ஜோகி " என்று அழைத்தாள்...

"ம்ம்ம்" சத்தமில்லாமல் இருந்தது.

அப்போது குளித்து முடித்து வெளியே வந்தான் ஜோகி..

அதைப்பார்த்த ரோகிணி.. கண்களை மூடி பின்னால் திரும்பிக் கொண்டாள்.

"மேனர்சே இல்லையா உனக்கு...? ஒரு பொண்ணு இருக்கிற இடத்திலே இப்படியா டவலோடை வந்து நிற்ப.. "என்று ஜோகியை திட்டினாள் ரோகிணி.

"ஹலோ மேடம் மேனர்சை பத்தி நீங்க பேசறீங்க..." என்று டீ சர்டை அணிந்தான்.

"ஹலோ ..." என்று கோபத்தில் திரும்பியவள் கண்களை திறக்காமலே அவனை திட்டினாள்.

"நீ கதவை லாக் பண்ணி வச்சுட்டு குளிக்க வேண்டியது தானே.." என்று ரோகிணி கூற..

அவள் அருகில் நெருங்கியவன்.. அவனது மூச்சு காற்று அவள் மூச்சில் கலக்கின்ற அளவிற்கு நெருக்கி நின்றான் ஜோகி. கண்களை மூடினாலும் அவன் நெருக்கத்தின் தாக்கத்தை உணர்ந்தவள். மெதுவாக கண்களை திறந்தாள்.

"நீ ரொம்ப பேசற ரோகிணி.." என்று ஜோகி கூற..
நல்ல வேளையாக டீ சர்டை அணிந்து நின்றதை நினைத்து கொஞ்சம் சந்தோஷம் கொண்டாள் அவன் விலகி செல்லவும்...

"அப்பாடா " என்று பெருமூச்சுவிட்டாள்.

"இது என்னுடைய ரூம் மிஸ்ஸஸ்  ஜோகித்.. அவர்களே.." என்று அவன் கூறிக் கொண்டு கண்ணாடி முன் நின்றான்.

"என்னது நீ திருந்தவே மாட்டியா...? " என்று தலையில் அடித்துக் கொண்டாள். ரோகிணி.

"அப்போது தான் ஜோகித்தின் ரூமை முழுவதும் பார்த்தாள். எங்கும் அவன் வாங்கிய டிராபிக்களும் மெடலும்... இடம் இல்லாமல். ஒதுக்கி வச்சு இருந்தான்.
அதை எடுத்து பார்த்தவள்... இது எல்லாம் நீ வாங்கினதா...? "என்று ரோகிணி கேட்க...

"இல்லை கடையிலே வாங்கிட்டு வந்து இருந்தேன்  உன்னை இம்பிரஸ் பண்ண..." என்று ஜோகி கூற..

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz