"வெற்றி
வாழ்க்கையை வாழந்துக்காட்ட
தோல்வி
வாழ்க்கையை புரிந்துக்கொள்ள....
"கண்ணாடி சிதறல்கள் அறையின் ழுழுவதும் சிதறிக்கிடக்க... புகைப்படங்கள் எல்லாம் நெருப்பில் எரிந்துக் கொண்டு இருந்தது... பரிசுகள் அனைத்தும் குப்பைப் போல் வீசி எறிந்தான் ராபர்ட்.
ஐயா “பால் சாப்பிடுங்க "என்று நடுக்கிக் கொண்டே ராபர்ட் முன் வந்தவன்..
அவன் கோப கனல் வீதும் பார்வையிலே விழகி போனான்.
அப்போது சுனில்குமார்... அந்த நகரத்தின் மிகப் பெரும் பணக்காரர். தாத்தா ஆண்டு விட்டுச்சென்ற சொத்துக்களுக்கு இப்போதும் அனுபவித்து வரும் பிஸினஸ் மேன் சுனில்குமார். இவரது ஒரே வாரிசு ... செல்ல மகன் ராபர்ட்.
பணக்கார திமிர் எதிலும் முன்னிலை வகிப்பவன்... ஆங்காரம் வெறி கொண்டவன் ... எதிலும் எப்போதும் தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற கர்வம் கொண்டவன். எங்கு சென்றாலும் வெற்றி கனியை தன்னோடு கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவன் அது மற்றவர்களின் வெற்றியாக இருந்தாலும் சரி அதை தன்னுடையதாக மாற்றிக் கொள்ளும் சுயநலக்காரன்... ரேஸிக் மீது மோகம் கொண்டவன்.... அங்கும் அவனது வக்கிரபுத்தி தலைதூக்கியது...
சுனில்குமார் பங்களாவிற்குள் அவசர அவசரமாக நுழைந்தார். ராபர்ட்காகவே சிறுவயது முதலே கவனித்துக் கொள்ள பணியாட்களை நிரப்பிவைத்தார் ...
குளிப்பாட்ட ஒருவர் .... சாப்பாடு ஊட்ட ஒருவர்... தலைவார ஒருவர் என்று தான் செய்ய வேண்டிய வேலைகளுக்கு கூட பணியாட்களை நியமிந்தவர்.... இப்போது இவன் இருக்கும் நிலைக் கண்டு பணியாளர்கள் பயத்தில் அவருக்கு போன் செய்ய, அமெரிக்காவிற்கு சென்றவர்... பிஸினஸ் டீல் பேச.. டீல்ஸ் அத்தனையும் கேன்சல் செய்து விட்டு வந்துவிட்டார்...
"ராபர்ட் என்ன கண்ணா செய்யற...? " என்று எரிந்துக் கொண்டு இருந்த நெருப்பை பணியாட்களை விட்டு அனைக்க செய்தார்....