“ காதலில் உண்மையான
அன்பை
பெறுவது கடினம்..அதை விட
அந்த
அன்பை இறுதிவரை பலப்படுத்துவது அதை விட கடினம்...இதை இரண்டும் சரியாக அமைந்தால்.
காதல் வாழ்வு கசப்பது அரிது....”ஹலோ என்று கத்தினாள் ரோகிணி..
அப்போது தன்னிலை வந்தான் ஜோகித்.
அவளிடம் இருந்த மொபைலை வாங்கியவன்.."நீங்க கிளம்புங்கள் நான் பார்த்துக்கிறேன்..." என்று அவனை அனுப்பி வைப்பதிலே கூறியாக இருந்தாள் ரோகிணி..
"ஏன் ரோகிணி மறுபடியும் ஏதாவது தப்பு நடந்துருன்னு பயப்படறீங்களா..? "அவளது கோபத்தை அதிகப்படுத்தினான்.
"எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்... என் ஜோகி நீ இல்லைங்கறப்ப இனி எந்த தப்பும் நடக்காது.. நான் தெளிவா இருக்கிறேன்.
"என்று ரோகிணி வெடித்தாள்."சரி பார்ப்போம் நைட் வரைக்கும்...
"என்று புன்னகைத்துக் கொண்டே அவளிடம் விளையாடினான். நான் இரவு வரை இருக்கிறேன் என்றால் விட்டு தான் வைப்பாளா என்னை... அதற்கு வழி செய்தான் ஜோகி. ""ஹலோ ஹலோ நைட் வரைக்குமா... இது சரிப்பட்டு வராது நீங்க கிளம்புங்க... என்னால் யாருக்கும் எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது தயவுசெய்து..." என்று மன்றாடினாள்.
"முடியவே முடியாது நாளைக்கு காலையில் தான் கிளம்புவேன் என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க..." என்று கிச்சனிற்குள் நுழைந்தான் பார்சலை ஓபன் செய்தான்...
அதில் இருந்த சாப்பாட்டை பிளேட்டில் வைத்து மீண்டும் ரூமிற்குள் வந்தான்.
"வாஸ் ரூம் போறீங்களா.. ? " என்று ரோகிணியிடம் கேட்டான்.
"ம்ம்ம்...! என்று முறைத்துக் கொண்டே எழ முயன்றாள் ... உங்களால் முடியாதது எல்லாம் ஏன் டிரைப் பண்றீங்க நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க...இருங்க நான் வரேன் " என்று பெட்டின் அருகில் இருந்த டீப்பாயின் மீது வைத்தான்..
அவன் வருவதற்குள் ரோகிணி " என்னால் முடியும் நீங்க தேவையில்லை எனக்கு" என்று சிறிது தூரம் நடந்தவள் தடுமாறிவிட... ஜோகித் தாங்கினான்.. அவனது கையைப் பிடித்துத் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று லாக் செய்தாள்.