"கடந்துவிடும் தூரம்
தான்
என்றாலும்
கடந்துவிடுவது
அவ்வளவு எளிதல்லவே..
"ரோகிணியும் அதே நிலையில் தான் தவித்தாள்.எதையும் தைரியமுடன் கடந்துவிடும் அவளிற்கும்... முந்திய நாள் நடந்த நிகழ்வுகளை கடக்க முடியவில்லை.
அவன் என்னை நெருங்கினாள்.... நான் அவனிடம் வீழ்கிறேனே... ஏன் நான் அவ்வளவு பலகீனமானவளா..? எவ்வளவோ சூழ்நிலைகளை கடந்து வந்து நிற்கிறேன்... இருப்பினும்... காதல் என்ற ஓர் வார்த்தை என்னை பலகீனப்படுத்திவிட்டது..
"நான் அவனது காதலை ஒப்புக் கொண்டாள்... நான் அவனிடம் என்னை இழப்பது உறுதி , அதை நினைத்தவள் நினைவிற்கு வந்தாள்.
தனது இறுதி ஆண்டின் முக்கியமான செமினார். இதை இழப்பது என்றால் முடியாது. ஆறு மாத உழைப்பு பல இரவுகள் தூக்கத்தை தியாகம் செய்து உருவாக்கியது கவனத்தை செமினாரின் மீது செலுத்தினாள்.
"அடுத்து ரோகிணி நீ தான் ரெடியா இரு என்று மேடம் கூற...
""எஸ் மேடம் "என்று செமினார் ஹாலிற்கு வெளியே தயாரானாள்.
"ஆன்ட்டி ..! முள்ளை முள்ளாலத்தான் எடுக்க முடியும் ..."என்று ஜோகித் கூற..
"எப்படி ...?
"என்று பெரியவள் கேட்க..""காதலை காதலால் தானே புரியவைக்க முடியும்... எப்படி ரோகிணினுடைய அம்மா அப்பா காதல்னால மேல வெறுப்பு உண்டாச்சோ.... இப்ப என்னோட காதல்லால காதல் அப்படி இல்லை ரோகிணி அதை உணர்ந்து மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்ன்னு அவளுக்கு உணர்த்தபோறேன்...."
"நீ சொல்லறது எல்லாம் கரெக்டு தான் தம்பி.... ரோகிணி மாறுவாளா..?
""மாறிடுவா.. நான் மாற்றுவேன்.. நான் இல்லாமா அவளால இருக்கு முடியாதுன்னு அவளுக்கு நான் புரியவைப்பேன்... காதல் பலகீனமானது இல்லை.. உனக்கு பக்கபலமா உனக்கான காதலோட எப்பவும் இருப்பேன்னு புரியவைப்பேன்..
"ஜோகித்தின் பேச்சில் நம்பிக்கை உண்டாயிற்று பெரியவளுக்கு.
சரியென்று சம்மத்தித்தாள்.