இவ்வுலகில்
குறை இல்லாமல்
வாழும் மனிதர்கள்
மிகவும்அரிதே....ரோகிணி பார்ட்டியில் நடந்த விஷயத்தை நினைத்துக் கொண்டே வந்தவள் எதிரே வந்த பைக்கை கவனிக்கவில்லை..., பிரேக் போட நினைத்தவள் அழுத்தமாக பிடித்துக் கொள்ள அடிபட்ட கையோ வலியில் துடிக்க தவித்தாள் எப்படியோ எதிரே பைக்கில் மோதி பிரேக் இட்டு நிறுத்தினாள்.
ஆனால் ஸ்கூட்டி பேலன்ஸை இழந்து கீழே விழுந்தாள்.ஜோகித் ஓடி வந்தான்
அவளை தூக்கிவிட்டு ஸ்கூட்டியை எடுத்து நிறுத்தினான். அவன் நன்றாக பார்க்க கூட இல்லை..
அதற்குள் அங்கிருந்தவர்கள் கூடி விட..ஒண்ணும் இல்லைப்பா கிளம்புங்க டிராப்பிக் ஆகுது என்று அங்கிருந்த இன்ஸ்பெக்டர்.
ஜோகித்தை அழைத்தார் இன்ஸ்பெக்டர். "இங்க வாங்க எதுக்காக இப்படி ஸீபீடா வண்டிய ஒட்டிட்டுப் போறீங்க... உங்க மேல கேஸ் போட்டா.. "என்று இன்ஸ்பெக்டர் கேட்க..
"ஸார் வேண்டாம் தெரியம நடந்துருச்சு" என்று முந்திக் கொண்டு இன்ஸ்பெக்டரிடம்.... கூறினாள் ரோகிணி.
"ஏன் அவர் பேச மாட்டாறா உன் மேல தப்பு இல்லையே மா .. அவன் தானே மா உன் மேலே வந்து மோதினான்..
" என்று இன்ஸ்பெக்டர் கூற..."ஸார்.... யார் மேல மோதுனாலும் என்ன ஆகிறப்போகுது வலி என்னமோ எனக்கு தான் என்னோட ஸ்கூட்டி சாவியக் குடுங்க நான் கிளம்பறேன்" என்று ரோகிணி கூற...
இன்ஸ்பெக்டர் சாவியை நீட்ட அங்கிருந்து ரோகிணி அகன்றாள்.
"ரோகிணி ரோகிணி "...என்று அவன் அழைக்க ..ரோகிணி விலகி தான் போனாள்.
"ஸார் ப்ளீஸ் ..என்னையும் விடுங்க..நான் அவசரமா கிளம்பனும் பைக் சாவி தாங்க.. வேணும்முன்னா" என்று தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான்.
"யோவ்... உன் காசு யாருக்கு வேனும்.. உனக்கும் அந்த பொண்ணை தெரியுமா...?
"
"தெரியும் ஸார்..
""தெரிஞ்சவங்க ஸார் கொஞ்சம் பிரச்சனை ப்ளீஸ் ஸார் நான் கிளம்புட்டுமா..
"என்று ஜோகி கெஞ்சினான்.