50 பகுதிகள்... இது என்னால் மட்டும் இயலாது... என் இதயமடி (டா) நீ எனக்கு படித்த அனைவருக்கும்...உங்கள் கருத்துகளை நீங்கள் கூறியதால் மட்டுமே இது சாத்தியமாயிற்று.. இல்லையேல்.. நான் எங்கு தொலைந்துப் போயி இருப்பேன் என்று என்னால் நினைத்து பார்க்க இயலவில்லை..... நான் செய்யும் தவறுகளை எல்லாம் கண்டுபிடித்து நீங்கள் கூறியதால் மட்டுமே.. இப்போது முழுபகுதியை நோக்கி நகர்கிறது..
இந்த நேரத்தில் உங்கள் நேரங்களை எல்லாம்.. என் கதைக்காக செலவழித்த அனைவருக்கும் நன்றிகள் பல...
நீங்கள் இன்றி நான் இல்லை....
இதே போல் உங்கள் ஆதரவையும் தொடர்ந்து தர கேட்டுக் கொள்கிறேன்..சிறு வேண்டுக்கோள்...
இந்த கதையில் உங்களுக்கு பிடித்த கதைமாந்தர் யார் ...? அவர்களை பிடிக்க காரணம்..? நேரம் இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.. மிக்க மகிழ்ச்சி கொள்வேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
" எதிர்பாராமல்
தான் சந்தோஷமும் ..
கஷ்டமும்..
புயல் போல் அடிக்கும்.."
"போதும் போதும்... நிறுத்துங்க.." என்று பெரியவள் கூற..
இருவரும் நிறுத்தினர்.. "முதல்ல கோவில் போலாம் அப்புறம்.. பார்க் அப்புறம் மூவி சரியா.. " என்று பெரியவள் கூற..
"சரி " என்று இருவரும் ஒத்துக் கொண்டனர்.
மாலை நேரம்..
பனி காற்று வீசியது... மனதில் ஜில்லென்று ஓர் உணர்வு.. ஜோகி உடன் தான் சேர்ந்து செல்வது இது முதல் தடவை.. என்பதால் தன்னில் அதிக கவனம் செலுத்தினாள்.
ஜோகி... ரோகிணியின் அறையை தட்டினான்.
"ரோகிணி ஓபன் பண்ணு.. டைம் ஆச்சு.. நீ கிளம்பி வருவதற்குள்ள மூவியே முடிஞ்சுரும்..
"
"அடடா.. இரு.. வரேன்" என்று.. ரோகிணி கதவை திறந்தாள்.
"அதுக்குள்ள என்ன அவசரம்..? "என்று ரோகிணி கேட்க..
ரோகிணியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ஜோகித்.
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)