பகுதி -54

2.4K 121 37
                                    


“காதல்...
வாழ்க்கையை
மட்டுமில்லை..
மனிதனையும்
அழகாக்கும்...”

"ஆமா ஜோகி நீ ஏன் ரேஸ் போறதே இல்லை... ப்ராக்டீஸ் கூட போறதே இல்லை.. என்னால் தானே "என்று கவலை கொண்டாள்.

"ரோகிணி உன்னை விட எனக்கு எதுவும் பெரிசு இல்லை.." என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

"அப்படி எல்லாம் என்னால விட முடியாது ஜோகி.. நீ நாளையிலிருந்து ப்ராக்டீஸ் போற இது என்னுடைய உத்தரவு.. "என்று ரோகிணி கட்டளை இட்டாள்.

அப்படியே ஆகட்டும் மகாராணி..  என்று அவளிடம் அடிமையாகி தான் போனான் ஜோகித்.

"அடடா கொஞ்சம் கூட நல்லாவே இல்லையே.. ஜோகி.. நீ பட்டுன்னு கூப்பிடறது தான் அழகு.. "என்று அவனது கன்னத்தை தட்டினாள்.

அவர்களின் வாழுவும் இனிமையானதாக மாறியது..

ஷாப்பை ரெடி பண்ணுவதற்கு ஓடி ஓடி அழைந்தான். எது தேவை என்று ஒன்றிற்கு இரண்டு முறை அலசி ஆராய்ந்தான்.

ரோகிணியிடம் கேட்டு கேட்டு எல்லாவற்றையும் செய்தவன்.
ஓடியவனை அருகில் அழைத்து உட்காரவைத்தாள்.

"சாப்பிட்டு போ ஜோகி.." என்று அவனிற்கு ஊட்டி விட்டாள்.

"என்னை நீ கேட்டு கேட்டு எதுவும் பண்ண வேண்டிய அவசியமே இல்லை... உனக்கு எது சரின்னு படுதோ அதை செய் ஜோகி..
அப்படி உன்னை விட எனக்கு எதுவும் அவசியமே இல்லை.. " என்று ரோகிணி கூற...

" என் ரோகிணியின்  முடிவு தான் என் வாழ்வு " என்று ஷாப்பை அரெஜ் செய்துவிட்டான் ஜோகித்.

"சரி என்ன பேர் வைக்கலாம் ரோகிணி.. "என்று ஜோகி சொல்லி முடிப்பதற்குள்.

"உன் பெயரை மட்டும்  தான் வைக்கனும்.." என்று அவன் கூறுவதற்கு சட்டென்று ரோகிணி கூறிவிட்டாள்.

"என்ன என்னுடைய பெயரா  வேண்டாம் வேண்டாம் பட்டு " என்று மறுத்தான்.

முடியாது ஜோகி இது தான் என் முடிவு என்று ரோகிணி ஆணித்தனமாக கூறவும்
அதற்குமேல் ஜோகி என்ன சொல்வது.. "சரியென்று " ஜோ பொக்கே ஷாப் உருவாகியது.

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Where stories live. Discover now