பகுதி - 58

2.7K 114 3
                                    

"சந்தோஷம்...
ஐந்து வார்த்தைகளில்
அடக்கிவிட முடியுமா என்ன..?
எல்லையற்றது அல்லவா...!"

"என்ன ரோகிணி சொல்லற...? இவங்க தான் என்னை பெத்து வளர்த்து உன்கிட்ட பத்திரமா சேர்த்தவங்க இப்போ என் செல்ல அம்மா " என்று மரகதம்மாளை கொஞ்சினான்.

"அப்படின்னா.".என்று ரோகிணி இழுக்க..

"அதுக்க காரணம் நான் தான் ரோகிணி" என்று ராபர்ட் அவர்களின் இருவர் முன்பும் மண்டியிட்டான்.

"நான் தான் காரணம்.. ஜோகி உயிரோடு இருக்கிற விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும்..?" என்று கண்ணீர் விட்டான்.

"அப்புறம் ஏன் ... ?" என்று ரோகிணி கேட்க..

"எல்லாம் என்னுடைய கெட்ட எண்ணங்கள் தான் காரணம்.... ஜோகித்தை பார்த்ததும்.. எப்படி இவன் உயிரோடு வந்தான்னு... விசாரிச்சேன்..
"என்று ராபர்ட் நடந்ததை ஒவ்வொன்றாக கூறினான்.

"ஆனா அங்கிருந்த ஹாஸ்பிட்டல்ல ஜோகி இறந்துட்டதாதான் இருந்துச்சு.. அங்க இருந்த அட்ரெஸ்ல நான் விசாரிச்சேன்.."

" அப்போ தான் ஜோகி உயிரோடு இருக்கிறதை உறுதிப்பண்ணுனேன்.
அந்த ஹாஸ்பிட்டல தான் உன்னை பார்த்தேன்..."

"நீ ஜோகித்தை விசாரிச்சு டாக்டர்கிட்ட பேசிட்டு இருந்த... எனக்கு உன்னை பார்த்துமே பிடிச்சுப்போச்சு...
"என்று ராபர்ட் கூற..

"என்னடா சொன்ன நீ...? "என்று ஜோகி ராபர்ட்டை நெருங்கியவன்..

ரோகிணி கண் அசைக்க நின்றான் ஜோகித்..

"இவன் என்ன சொல்லறான் பட்டு..". என்று ஜோகித் கோபபட்டான்.

"நான் சொல்லறேன்... ஜோகி.. அவன் முதல்ல பேசி முடிக்கட்டும்.."என்று ரோகிணி சொல்ல அமைதியானான் ஜோகித்.

"அப்ப தான் எனக்குள்ள ஜோகித்தை பழிவாக்கிற எண்ணத்துக்கு வழி கிடைஞ்சுதுன்னு... உன்னை பத்தி விசாரிக்க ஆர்மபிச்சேன்.. ஆனா யாருக்கும் உன்னை பத்தி ழுமுசா தெரியல.. சரின்னு அந்த டாக்டர்கிட்டே விசாரிச்சேன்... " நீ என்னுடைய ரிலேட்டிவ் தான்னு..

என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது)Where stories live. Discover now