"நாம் ஒன்று நினைக்க
கடவுள் ஒன்று நினைப்பான்.. "பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தவன் ஆன் செய்தான். ஆனால்.., மொபைல் சுவீஸ் ஆப் ஆகி இருந்தது.
"அடக்கடவுளே... சார்ஜ் இல்லையே.. "என்று நினைத்தவன் சார்ஜில் பிளக் செய்து விட்டு அயர்ந்தான்.
அறையில் ..
"அக்கா இப்போ உங்களுக்கு வலி எப்படி இருக்கு. ? நான் வேணும்ன்னா ஆயில்மெண்ட் தடவி விடட்டுமா ...?" என்று மகி கூற
"வேண்டாம் மகி ... வலி இல்லை. "என்று ரோகிணி கூறினாள்."எப்படி ஆச்சு அக்கா..? இதுவரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே..
""அதுவந்து மகி "என்று மகி என்று இழுத்தாள்.
"இங்க என்னையப் பார்த்து சொல்லுங்க அக்கா" என்று ரோகிணியை தன் பக்கம் தள்ளினாள்.
"மகி நான் ஸில்ப்பாகி கீழ விழுந்துட்டு.. வேற எதுவும் இல்லை..." என்று சமாளித்தாள்.
"ரோகிணி அக்கா வேற எதுவும் இல்லைல...?" என்று மகி அழுத்திக் கூற
"இல்லை மகி..
""சரி அக்கா குட் நைட்
""குட் நைட் மகி " என்று உறங்கினாள்.
உன்கிட்ட எப்படி மகி சொல்ல முடியும் இனி அவனைப் பத்தி பேச எனக்கு விரும்பமே இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே உறங்கினாள்.விடியல்கள்
தோன்றும்
வெளிச்சம்மாய்..
என்னுள்
நீ
ஒளிர்வாயா..?ஹாஸ்பிட்டல்
மதியும் நவநீதமும் வந்து விட, மரகதம்மாள் ரெடியாக இருந்தாள். "நாம வீட்டுக்கு போயிறலாம்ல...
"என்று நவநீத்திடம் கேட்டாள் மரகதம்மாள்."கண்டிப்பா மரகதம் ... வீட்டுக்குப் போலாம்...
""அப்ப சரி எல்லார்கிட்டேயும் சொல்லிட்டீங்களா.. குறிப்பா உங்க தங்கச்சிக்கிட்ட... ? வரவங்களுக்கு தாம்பூல தட்டு குடுக்கனும் பந்தல் வாழைமரம் ஐய்யர் கிட்ட சொல்லிட்டீங்களா...
?""மரகதம் மூச்சு வாங்கு எல்லாம் ரெடியா இருக்கு... வீட்டிக்கு முன்னாடி பந்தல் போட்டுக்கிட்டு இருக்காங்க.. மைக்செட் எல்லாம் கட்டப்போறாங்க.. அது அது க்கு ஆள் வச்சுட்டு வந்து இருக்கேன்.. நீ கவலைப்படாத மரகதம்... வா வீட்டுக்குப் போலாம்.
"