"அதிசயம்
நிகழும் போது..
இறைவன்
இருப்பதை புரிந்துக் கொள்வாய்..! ""என்ன சொன்ன ரோகிணி.... "என்று ஜோகி கேட்க..
"என் ஜோகி.. நீ என்னோட ஜோகி...." என்று அவளனது கைகளை இறுக்கப்பற்றினாள் ரோகிணி.
"என்ன சொல்லற.. "
"ஆமாம் ஜோகி என்னோட ஜோகி சாகவே இல்லை நீ தான் நித்தமும் என்னை கனவிலேயும் நிஜத்திலும் காதலிச்ச ஜோகி.. நீ தான் நீ தான் என் ஜோகி "என்று கத்தினாள் சந்தோஷத்தில்.
புரியாமல்.."என்ன சொல்லற "ரோகிணி..என்று குழம்பினான்.
" ஜோகி இறந்து தான் .." என்று அவன் கூறும் முன் அவனது உதடுகளில் கைவைத்து மறைந்தாள்."ம்ம்ம் ...! இனி ஒரு தடவை பேச்சுக்கு கூட சொல்லாத.." என்றாள் ரோகிணி.
"ஆனா ரோகிணி எப்படி சொல்லற நீ எனக்கு எதுவும் நியாபகமே வரலை.. "என்று ஜோகி கூறினான்.
"நியாபகம் வரலையா ஜோகி " என்று இத்தனை நாட்கள் தனக்குள் மட்டும் மறைத்து வைத்து இருந்த..., ஜோகி தனக்கு முதன் முதலாய்.. கழுத்தில் இட்ட ஜெயினுடன்..அவன் கட்டிய மாங்கல்யத்தை.. எடுத்து காட்டினாள் ஜோகியிடம்.
ராபர்ட் தூக்கி எறிந்ததை எடுத்து வித்யா மயக்கத்தில் இருந்தப்போது ரோகிணிக்கு மாட்டிவிட்டாள்.. அப்போது தான் உணர்ந்தாள் வித்யா.. இவர்கள் சேர வேண்டும் என்று... ஒரு பெண்ணிற்கு இன்றியமையாதது தாலி கொடி அதை அறுத்து எறித்தாள்.. உயிரே போயிவிடும்.. ரோகிணி அதன் வலியை உணரக்கூடாது என்று நினைத்து மாட்டினாள்.
அதை தொட்டு பார்த்தான்.. ஜோகி அதிசயம் தான்.. "ஆனா எப்படி ரோகிணி உன்கிட்ட..நான் ஆசைப்பட்ட மாறி ஆனா இது என்னோட கனவுல தானே நடந்துச்சு.. "என்று நம்பமுடியாதவனாய் கேட்டான் ஜோகி..
"ம்ம்ம ...! இல்லை ஜோகி கனவுல இல்லை.. நிஜத்துல நடந்தது..தான் உங்களுக்கு கனவா நியாகபடுத்த முயற்சி பண்ணுச்சு உங்க மனசு.. "
"அப்படியா ரோகிணி.".என்று மேலும் ஆச்சரியமானான்.
"ஆனா.. "மேலும் ஜோகித் கூற..
