பகுதி -56
" மீளா துயரம்...
நாம் உயிரென நினைத்த..
உறவு நம்பை விட்டு
விலகி செல்லும் போது தான்..
உருவாகிறது "
"ப்ளீஸ் ஜோகி மகி இருக்கா மகியுடைய அம்மாவும் இருக்காங்க என்னை பார்த்துப்பாங்க " என்று ரோகிணி கூற..
"என்னை விடவா ரோகிணி..".என்று ஜோகி கேட்க..
அதற்கு மேல் ரோகிணியால் எதுவும் பேசமுடியவில்லை ரோகிணியால் முடிந்தவரை சீக்கிரம் எழ முயற்சி செய்தாள். ஆனால் விதி அவளை படுக்க வைத்தது.
"ஜோகி என் வாழ்க்கை ஏன் இப்படி...?" என்று மனம் நொந்தாள்.
"பட்டு உனக்கு நான் இருக்கேன் நீ எதுவும் பேச வேண்டாம் நல்லா ரெஸ்ட் எடு நம்ப குட்டி செல்லமும் தூங்கட்டும் "என்று அருகிலேயே அமர்ந்தான்.
மகியும் அவளது அம்மாவும் பார்த்துக் கொள்வதாக கூறியும்..., மறுத்துவிட்டான்.. "இந்த நேரத்தில் ரோகிணிக்கு நான் ரொம்ப முக்கியம் "என்று கூறினான்.
ஆறு நாட்கள் இடைவிடாது... தூக்கத்தை மறந்து பார்த்துக் கொண்டான் ஜோகித்.
அவனது அன்பால் உடல்நலம் தேறினாள். "ஜோகி நாளைக்கு உனக்கு ரேஸிங் நீ கிளம்பு ப்ளீஸ்...இப்போ தான் நான் சரி ஆகிட்டேன்ல "என்று வேண்டி நின்றாள்.
"ரோகிணி நான் காலையில நேரா டிராக்கு போயிடறேன் நீ கவலைப்படாதா.."என்று ரோகிணிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டான்.
"ஜோகி "என்று ஜோகியின் தோளில் சாயந்தாள் ரோகிணி.
"என்ன பட்டு ..." என்று ஜோகி கேட்க
"உனக்கும் எனக்கும் வேணா யாரும் இல்லாம இருக்கலாம்.. ஆனா நம்ப குட்டி செல்லத்துக்கு தாத்தா பாட்டி சித்தி சித்தப்பான்னு ஒரு பெரிய குடும்பமே கிடைக்கனுன்னு ஆசைப்படறேன்...என்னை மாறி என்னுடைய குழந்தையும் அனாதையாவே வாழக்கூடாது "என்று கண்ணீர்விட்டாள்.