“ முயற்சி செய்பவன் ...
தன்னுடைய தோல்வியை
ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டான்..”அப்படி போராடி வென்றவனே ஜோகித். அந்த வேகமும் ஆற்றலும் தான் அவனுக்கு இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது....
ரசிகர்கள் பட்டாளம் அவனை புடை சூழ்ந்தது... செல்பி எடுக்கும் ஆர்வத்திலும், ஆட்டோகிராப் வாங்கும் ஆர்வத்திலும்.. , ரசிகர்களின் முகத்தில் தெரியும் களிப்பில் தன்னையே மெய்மறந்தது போனான்.
அங்கு ஒரு குட்டி தேவதை தனது அப்பாவின் கழுத்தில் உட்கார்த்துக் கொண்டு ஜோகித்தையே பார்த்துக் கொண்டு இருந்தது.
சூது அறியா கள்ளமற்ற மழலையின் சிரிப்பு அவனை கவர்ந்து இழுந்தது.. கூட்டத்தை விலக்கி கொண்டு அந்த குழந்தையிடம் நெருங்க ஒரே தாவலில் அவனிடம் ஒட்டிக் கொண்டது...குழந்தையின் அப்பாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி... குழந்தைக்கோ அதை விட சந்தோஷம்... அந்த பிஞ்சு கைகளால் அவனது முகத்தை தொட்டு தொட்டு பார்த்தது..
அவர்களிடம் பேசியப்போது தான் தெரிந்தது.. அவர் ஜோகித்தின் தீவிரமான ரசிகர் என்றும்... வீட்டில் இருந்து ரேஸ் பார்க்கும் போது .... ஜோகித்தின் முகம் வரும் போது எல்லாம் டிவியின் முன் துள்ளி குதிப்பாள் எனவும்.. நேரில் காணும் ஆர்வத்தோடு மூன்று வருடமும் வருவார்களாம்...? ஆனால் அப்போது எல்லாம் ஜோகித் பங்கேற்காதலால் வருத்தத்தோடு செல்வார்கள்.. இம்முறை... எங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று அவர்கள் கூறியதைக் கேட்டு... ஜோகித்தின் கண்கள் ஈரமாகியது ஆனந்தத்தில்.
குழந்தை ஜோகித்தின் கன்னத்தில் முத்தமிட.... அவனும் முத்தமிட்டான் ஆனந்த தருணத்தை அணுஅணுவாக ரசித்தான்.
நேரம் ஆக ஆக ரசிகர்கள் கூட்டம் விடைப்பெற்று சென்றது... மாலை நேரம்... நெருங்க.. மைதானத்தின் உள்ள நிழற்குடையில் அமர்ந்தான்... அங்கு அவனது டீம் மெம்பர்கள் சந்தோஷத்தில் பார்ட்டியை கொண்டாடிக் கொண்டு இருந்தனர். அவன் மனதிலுள் பல கேள்விகள்... ' முதல் கேள்வி நான் ஏன் மூன்று வருடங்கள் பங்கேற்க வில்லை...
'
அப்போது அவனது மொபைல் ரீங் ஆகியது..
தொடு திரையில் ..தெரிந்த நம்பரை பார்த்தவுடன்
"ஓ மை காட்... How to i Handle this switchwation.. ?
"
அவன் எடுப்பதற்குள் நின்றுப்போனது... விரைவாக மொபைலை பார்த்தவன் 25 மிஸ்ட்டு கால்...
அதற்கு மேலும் தாமதிக்காமல்.. டைல் செய்தான் மறுமுனையில் கம்பீரமான குரல் ஒளித்தது..
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)