" அனைத்தையும்
கடந்துவிடும்
என்னால் ..
உன்னைக் கடக்க மட்டும்..
மனம் ஏனோ தயங்குகிறது... "குளிர்காற்று தென்றலாய் இதம் தர.., மழை தன் பங்கிற்கு மேலும் இதம் தர...ரோகிணி அதை ரசிக்க தவறவில்லை..
"ரோகிணி..." என்று பின்னாலிருந்து அணைத்தான் ஜோகி...
"சொல்லுடா... " என்று ரோகிணி கூற..
அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தை தனது கழுத்தில் உணர்ந்தாள் அணைப்பை இறுக்கப்படுத்தினான் ஜோகி..பேசாமல் இரண்டும் நெஞ்சங்களும் பேசியது.
"ஜோகி .. "காற்றின் வேகம் அதிகரித்தது.. குளிரால் கைகளை உதறினாள் "ரோகிணியை தன் ஸ்வெட்டருக்குள் சிறை வைத்தான் ஜோகித்."இப்போ ... இன்னும் எனக்கு நெருக்கத்துல வந்துட்டேல ரோகிணி... அவனது மூச்சு க் காற்று அவளுக்கு இன்னும் நெருக்கமாக...
""ஜோகி நமக்கு எப்போ கல்யாணம் நடக்கும்...?
""ம்ம்ம்ம்...! இப்பவே இங்கேயே தான் " என்று தான் வைத்திருந்து மோதிரத்தை தனது ஜெயினில் கோர்த்தவன்... அவளது கழுத்தில் அணிவித்தான்.
"ஜோகி விளையாடாத...டா
""ம்ம்ம்ம்... இனி நீயும் கணவன் மனைவி தான் சரியா... " நான் உன்னைய எப்போ பார்த்தேன்னோ... அப்பவே எனக்கு நீ தான் மனைவி ... நான் தான் உனக்கு ஹஸ்பெண்ட்... மனசு அளவுல நீயும் நானும் அப்படித்தான் வாழ்றோம்.... "அப்புறம் என்ன..? என் பட்டுக்கு இவ்ளோ கவலை...
""ஜோகி மேஜேரஸ் நம்ப இரண்டு பேர் யட்டும் சார்ந்த விஷயம் கிடையாதுல.. எப்போ உங்க வீட்டுல பேசப் போற... " என்று
"வீட்டுக்கு தானே ...! நீயும் நானும் போய் நின்னா அவ்வளவு தான் ரோகிணி முதல் வேலை உன்னையும் என்னையும் பிரிஞ்சுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க.. " என்று அவளை விடுவித்து அருகில் இருந்த பெட்டில் அமர்ந்தான்."உன்னையும் என்னையும் இந்த விஷயத்துல பிரிங்க யாரால முடியும்..? என்று அவன் மடியில் அமர்ந்தாள்.
"ரோகிணி உனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குது... எனக்கு எங்க வீட்டுல சொல்லறது எல்லாம் பெரிய விஷயம் கிடையாது... ஆனா அவங்க உன்னையும் என்னையும் பிரிஞ்சுடுவாங்கன்னு பயமா இருக்கு என்னோட சொந்தக்காரங்களப் பத்தி தெரியாது உனக்கு... என்னால உன்னைய விட்டு எப்படி வாழ முடியும்.?" "நமக்கு யாரும் வேண்டாம்.. "ரோகிணி.
