"பயம்...
மனிதனை
அனுஅனுவாய்
கொள்ளும் கொடிய ஆயுதம்... "ரோகிணி பட்டுப்புடவையில் தளிர் இடையாய் நின்றாள். அவளது நெற்றியில் தன் இதழை பதித்த வண்ணம் அவளது முகத்தை தாங்கி நின்றான்.அவன் தந்த இதழ் முத்தத்தில் மயங்கி நின்றாள்.
அதைப் பார்த்த ஜோகித்.
அதிர்ச்சியடைந்தான்.இமைக்கொட்டாது விழிகள் . ரோகிணியின் மொபைல்லில் இருந்த திரையைப் பார்த்து நின்றான்.
ஓர் நிமிடம் தான் ஜோகி
அவனால் அந்த மொபைலை பிடிக்க முடியாமல் பெட்டில் தவற விட்டான்... தலையை பிடித்தான் வலி தான் எப்படி ரோகிணியோடு புரியாமல் தவித்தான்.அருகில் இருந்த தண்ணீரைப் பருகினான்... அப்போதும் அவனது பதற்றம் நிற்கவில்லை.. வெளியே அழைக்கும் சத்தம் கேட்கவும் அறையை விட்டு வெளியே வந்தான்.
பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தான்.
"அப்பபபப்பா " என்று அவனுக்குள் பேச்சு குளறியது.."என்ன ஆச்சு ஜோகி ? ஏன் ஒரு மாதிரியா இருக்க.." என்று கேட்டார்...
" ஒண்ணும் இல்லை.... என்ன விஷயம் டாடி..." என்று நிதானத்திற்கு வந்தான்.
"பத்திரிக்கை டிசைன்ஸ் எல்லாம் கொண்டு வந்து இருக்காங்க... உனக்கு எதுப்பிடிக்குதுன்னு சொன்னா டிசைன் பண்ணியறலாம் பா..! "என்று நவநீதம் கூற..
"உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சா சரி டாடி..." என்று ஜோகி கூற..
"அவன் மனதை புரிந்துக் கொண்ட நவநீதம் சரி" என்று சென்றார்.
அறைக்குள் வந்தவன் கதவை தாழிட்டான்..மொபைலை பார்க்க முடியாமல் தவித்தான். அதை பார்க்கும் சக்தியை இழந்தான்.அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். " இந்த மொபைல்ல நான் முன்னாடி பார்த்திருக்க கூடாது.... கடவுளே நீங்க கூடவா என் வாழ்க்கையில இப்படி விளையாடுவீங்க... அப்படி பார்த்திருந்தால் ரோகிணியிடம் சென்று இருப்பேன்னே..! இப்போது மட்டும் என்ன...? எது தடுக்கிறது செல் " என்று அவன் மனம் உரைத்தது.
![](https://img.wattpad.com/cover/168428406-288-k521073.jpg)