"அன்பை யாராலும்
சொல்லி புரிய வைக்க இயலாது..அவர்களாகவே உணர்ந்தால்
மட்டுமே முடியும்...""இனி நான் வாழ்வது உனக்காக மட்டும் தான் பட்டு." என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். அந்தக் காட்சி அப்படியே ரோகிணியின் மனத்திரையில் ஓடியது.
நெருங்கி வந்தவன் விலகிப் போனான். அவளது கண்ணீர் பெருக்கெடுத்தது.
சற்று அமைதியாகியப் பின்.
"எப்படி ரோகிணி நடந்துச்சு.. எனக்கு ஏன் எதுவுமே நியாபகம் இல்லை...?
" ஜோகித் கூற"ஏன்னா என்னோட ஜோகித் நீங்க இல்லையே "...
"என்ன சொல்லற ரோகிணி.." என்று தடுமாறினான். ஏனெனில் அவன் மனதில் கோட்டைகள் பல கட்டினான்.
"என்னோட ஜோகி செத்துப்போயிட்டான்.. அப்படி இருக்கப்பட்ட எப்படி நீயாக முடியும்...
" என்று ரோகிணி கூற"என்ன சொல்லறீங்க என்று அதிர்ச்சியானான். தெளிவா சொல்லுங்க.. என்ன தான் நடந்துச்சு இவருக்கும் உங்களுக்கும் " என்று ஜோகி கூற..
"நானும் ஜோகித்தும் உயிருக்கு உயிரா லவ் பண்ணோம் கல்யாணப்பண்ணோம்... அவங்க வீட்டுக்கு தெரியாம... "அதற்கு மேல் ரோகிணியால் பேச முடியவில்லை.
"ப்ளீஸ் அழாதீங்க ரோகிணி மேடம்...
""ஆனா அவங்க என்னைய மாதிரி இருக்காங்க எப்படி..?
" என்று ஜோகித் கேட்க"ம்ம்ம்ம்... என் ஜோகி மாதிரி தான் இப்ப நீங்க இருக்கீங்க... அது தான் ஏன்னு எனக்கு தெரியலையே..?
""நான் எதையும் நம்ப மாட்டேன் ரோகிணி உன் விஷயத்துல நான் கண்ணால பார்க்கற வரைக்கும் என்னால நம்ப முடியாது.
" என்று உறுதியாக இருந்தான்."நான் தான் அவன் " என்று வாதாடினான். ஜோகித் "எனக்குள்ள தோனுதே நீ தான் எனக்குன்னு சொந்தமானவன்னு.. அப்புறம் எப்படி...? "என்று ஜோகித் கூற..
"அது உங்க மனசு சம்பந்தப்பட்ட விஷயம் என்னால பதில் சொல்ல இயலாது..
" என்று மறுத்தாள் ரோகிணி.
