திருமணம் முடிந்த பிறகு தம்பதியர் பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.... நேரம் செல்ல செல்ல அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் ஒவ்வொன்றாக செய்து முடித்தனர்
அஷ்வின் ராஜ் இவற்றை முழு மனதுடன் செய்யாமல் ஏதோ சொல்றாங்க நாமளும் செய்வோம் என்ற வேண்டாவெறுப்பான மனநிலையில் அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தான்.
விகாஷ்" டேய் அஷ்வின் பாருடா அங்கிள் எவ்ளோ சந்தோஷமா இருக்காரு ... இப்படியே அவரு சந்தோஷமா இருக்கனும் அவரோட சந்தோஷம் பாதிக்கிற மாதிரி எந்த வேலையும் செஞ்சு தொலைஞ்சுடாதடா " என்றான் அஷ்வின்க்கு மாத்திரம் கேட்கும் படி
அஷ்வின்"டேய் அவருக்காக தான் இவங்க சடங்கு சம்பிரதாயம் என்ற பெயருல செய்ற கூத்து எல்லாம் பொறுத்துட்டு இருக்கேன் இல்லனா...."என்றான் கோவமாக
விகாஷ்" சரி மச்சான் பாவம் டா சிஸ்டர் மட்டும் தனியா இருக்காங்க போய் பேசு" என்றான் மெதுவாக
அஷ்வின்" மொதல்ல போய் கண்ண நல்ல டாக்டர் கிட்ட காட்டு அதான் அவ கூட எல்லோரும் இருக்காங்கள அப்புறம் என்ன" என்றான் ஒரு முறைப்புடன்
விகாஷ்" ஹ்ம் இருக்காங்க ஆனா என்ன தான் எல்லாரும் இருந்தாலும் சிஸ்டர் பக்கத்துல நீ இருக்குற மாதிரி ஆகுமா அதனால போய் பேசு டா " என்றான்
அஷ்வின்"இதுக்கு தான் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேன் கேட்டீங்களா" என்றான் கடுப்பாக
விகாஷ்" ப்ச் பாவம் டா அந்த பொண்ணு கண்டிப்பா ஒனக்கு நல்ல ஒரு மனைவியா இருப்பாடா அவ கூட சேர்ந்து வாழுற வழிய பாரு " என்றான்
அஷ்வின்" என்ன பெல்டி அடிக்கிறியா அதான் நான் சொல்லிடேனே அவ கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் சரி ஆனா சேர்ந்து வாழ மாட்டேன் அவள என்னால என்னோட பொண்டாட்டியா பார்க்க முடியல டா " என்றான்
விகாஷ்" என்னடா நீ ப்ச் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்ததே நீ இன்னும் நெனச்சிட்டு இருக்க.. உன்னால மறக்க முடியாதுன்னு தெரியும் ஆனா அதையே நெனச்சிட்டு இருந்தா.... போதும் டா போதும் நீ நீயாவே இல்ல டா எப்ப பாரு மூஞ்ச தூக்கி வச்சுட்டே இருக்கு.... உன்னோட உண்மையான சிரிப்பே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி காணாம போச்சு டா என்னால உன்ன இப்படி பார்க்க முடியல டா " என்றான் கண்கள் கலங்க
அஷ்வின்".........."
விகாஷ்" டேய் கடவுள் உன்னோட லைஃப்ல இன்னொரு சான்ஸ் கொடுத்து இருக்காரு டா உன்னோட பழைய சந்தோஷத்த திரும்ப கொடுத்துட்டாரு இந்த பொண்ணோட வடிவுல சொன்ன புரிஞ்சிக்க டா" என்றான் கெஞ்சும் குரலில்
அஷ்வின்" நீ சொல்றது எல்லாம் உண்ம தான் ஆனா என்னால அவள மறக்க முடியாதுடா மறக்கவும் மாட்டேன்" என்றான்
விகாஷ்" டேய் என்ன தான் இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் இப்போ புருஷன் பொண்டாட்டி அதனால நீ இங்க சிஸ்டர் அங்க என்று ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா பார்க்குறவங்க என்ன நெனப்பாங்க..." என்று கூறிக்கொண்டே சஞ்சனாவை சைகையால் அழைத்தான்
அஷ்வின்" இவள எதுக்கு டா இங்க கூப்பிட்ட " என்று விகாஷை கடிந்து கொண்டான்
சஞ்சனா" அண்ணா கூப்பிட்டீங்களா " என்றாள் பணிவாக
விகாஷ்" ஆமா மா நீ ஏன் அங்க நிக்குற மொதல்ல வந்து உன்னோட புருஷன் பக்கத்துல நில்லு" என்றான்
அஷ்வின்" டேய் என்னடா பண்ற"என்றான்
சஞ்சனா அஷ்வின் முகத்தை பார்க்க அவன் முகத்தை திருப்பிக் கொண்டான் இதனால் சற்று தயங்கியவளாய் " இல்ல இருக்கட்டும் அண்ணா நான் அங்கேயே நிக்குறேன் " என்றாள் விகாஷிடம்
விகாஷ்" அட என்னமா நீ வந்து நில்லு நான் ஒரு போட்டோ எடுத்துகுறேன் " என்றான்
சஞ்சனா" சரி அண்ணா "என்று தயக்கத்துடன் அஷ்வின் பக்கத்தில் போய் நின்றாள்
அஷ்வின் இவளிடம் விலகி கொஞ்சம் தள்ளியே நின்றான்
விகாஷ்" கொஞ்சம் சேர்ந்து நில்லு மா " என்றான்
சஞ்சனா .... அஷ்வின் பக்கத்தில் நெருங்கி போய் நின்றாள் ... அஷ்வின் அவளை முறைத்துப் பார்க்க அதனை சற்றும் பொருட்படுத்தாமல் இன்னும் இன்னும் அவனை நெருங்கியே நின்றாள்
விகாஷ்" சூப்பர் மா .... சூப்பர் சிஸ்டர் கொஞ்சம் சிரிங்க" என்றான்
சஞ்சனா "ஒகே ஒகே என்று தனது மொத்த பற்களையும் வெளியே காட்டி சிரித்தாள"
விகாஷ்" டேய் நீயும் சிரிடா என்று கூறும் போதே விகாஷை முறைத்துக் கொண்டே இருந்தான் ராஜ் அஷ்வின் ராஜ்
சஞ்சனா...அஷ்வினின் தோலை சுரண்டி ஏங்க கொஞ்சம் சிரிங்க என்றாள்
அஷ்வின்க்கு கோபம் தலைக்கேறியது இதனை அறிந்த விகாஷ் சரி மா போட்டோஸ் எடுத்தாச்சு நீ போ மா என்று கூறி சஞ்சனாவை அவ்விடம் விட்டு அனுப்பி வைத்தான் .
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை