அத்தியாயம் 43

1.9K 86 33
                                    

இமையை ஒரு நிமிடம் மூடித் திறந்து மூச்சை இழுத்துவிட்டபடி ஹாலிற்கு வந்தாள் சஞ்சனா

இவள் வரவும் ..." அங்கிள் முன்னாடி ஏதாவது ஏடாகூடமாக பேசி அவரு மனசு புன்படும் படி ஆகிவிடக் கூடாது" என நினைத்தவனாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அஷ்வின்

" அங்கிள் இருங்க காபி எடுத்துட்டு வரேன்" என்று சாதாரணமாக கூறிவிட்டு கிட்சனுக்குள் புகுந்து கொள்ள

இவளது அங்கிள் என்கிற வார்த்தையில் இங்கு நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் அவளது காதிற்கு போய் சேர்ந்திருக்க வேண்டும் என எண்ணினர்

" பா உங்களால யாரு வாழ்கையும் நரகமாகல யாரு வாழ்கையும் கெட்டுப் போகல இனி வரும் நாட்கள்ல நாங்க சந்தோஷமா தான் இருப்போம் அதுக்கு நான் உத்தரவாதம் அதனால எதையும் நினைச்சு பீல் பண்ணாதீங்க பா" என்றான் அஷ்வின்

" நீ சொல்லுறது நடந்தா சந்தோஷம் தான்பா...உங்க ரெண்டு பேருக்கும் என்னோட ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு சந்தோஷமா வாழணும்னு தான் என்னோட ஆசை... அது பாதிக்கிற மாதிரி நடந்துகாத பா... புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்ட வாரது சகஜம் தான் ஆனா அந்த சண்டையே வாழ்கையாக மாறக் கூடாது " என்றார் ராமசாமி

அவனும் புரிந்தது போல தலையை ஆட்டினான்

"அங்கிள் காபி எடுத்துக்கொங்க " என்று காபியை நீட்ட அவரும் வாங்கி கையில் வைத்துக் கொண்டார்

"எனக்கு தான் சுகர் இல்லாத காபி கிடைக்கும் .. உங்களுக்கு சுகரெல்லாம் கரெக்டா போட்டிருப்பா பா தைரியமா குடிக்கலாம்" என்றான் நக்கலாக

"அஷ்வின்" என்று அவனை முறைக்க வித்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது

" என்ன மன்னிச்சிடு மா " என்றார் ராமசாமி

"அய்யோ அங்கிள் என்ன இது நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க... பிளீஸ் அங்கிள் இனிமே இப்படி பண்ணாதீங்க" என்றாள் உண்மையான பணிவுடன்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Donde viven las historias. Descúbrelo ahora