மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்க வரிகளை உடைய சங்குகள் ஒலிக்க திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன... மண்டபம் முழுவதும் உறவினர்கள், சொந்தங்கள் மற்றும் ஊர்க்காரர்கள் மணமக்களை வாழ்த்த வருகை புரிந்து இருந்தனர்
" நல்ல நேரம் முடியிறதுக்குள்ள மாப்பிள்ளையும் பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கோ "என்று ஐயர் கூற உடனே மணமேடை அருகில் இருந்த ராமசாமி மாப்பிள்ளை தோழன் விகாஷிடம் போய் அஷ்வின் ராஜ்ஜை அழைச்சிட்டு வா என்று உத்தரவு இட்டார் அவனும் சிட்டாக மணமகன் அறையை அடைந்தான்...உள்ளே சென்றவன் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் சிலையானான் நம் கதையின் நாயகனின் நிலையை கண்டு
விகாஷ்" என்ன டா இது உன்ன வர சொல்றாங்க நீ வேட்டி சட்ட போடாம முடியெல்லாம் களைந்து யாரோ மாதிரி இருக்க " என்றான் கோபமாக
அஷ்வின்" என்னால முடியல டா"என்றான் கண்கள் கலங்க
விகாஷ்" என்னடா விளையாடுறியா முகூர்த்த நேரம் வேற நெருங்கிட்டு இருக்கு போ போய் இந்த வேட்டி சட்டய கட்டு என்று கட்டிலில் மேல் இருந்த வேட்டி சட்டையை எடுத்து அஷ்வின் ராஜ் கையில் வைத்தான்" கோபமாக
அஷ்வின்" டேய் நீங்க தான் டா என்ன வச்சு விளையாடுறீங்க நான் ஆரம்பத்துல இருந்தே இந்த கல்யாணம் புடிக்கல புடிக்கலன்னு தான் சொல்லிட்டு இருக்கேன் என்னால அவள மறக்க முடியல டா " என்றான் அழும் குரலில்
இவன் கூறும் விதத்தில் விகாஷின் தொண்டை அடைத்து கண்கள் கலங்கிப் போனது
அஷ்வின்"என்னால முடியாது டா தயவு செஞ்சு புரிஞ்சிக்க டா அவள மறக்க முடியல டா கண்ண மூடினா கூட கண் முன்னாடி வந்து நிக்குறாடா " என்றான் விகாஷை கட்டிப்பிடித்துக் கொண்டே
விகாஷ்... ஆதரவாக அவன் தலையை வருடினான்ராமசாமி வந்து கதவை தட்ட விகாஷ் ஓடிச் சென்று கதவை திறந்தான்
ராமசாமி" எங்க பா அஷ்வின் சீக்கிரம் வர சொல்லு " என்று பரபரப்பாக கூறிவிட்டு சென்றார்
BINABASA MO ANG
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை