சஞ்சனா வின் முகத்திலோ கடலை மா நன்றாக காய்ந்து வரட்சி ஏற்பட்ட நிலம் போல வெடித்தவாறு காட்சியளிக்க தன் பெரு விழிகளை விரித்து
" நீ என்னையே பேய்னு சொல்லுறியா... இந்த வீட்டுல நெஜமாவே பெய் இருக்கு அது தெரியுமா ஒனக்கு?" என்றாள்
"ஆமா... இந்த வீட்டுல பேய் இருக்கு டி.. இப்போ தான் உனக்கு தெரிஞ்சிச்சா ?" என்றான் சாதரணமாக
"இல்ல இல்லையே எனக்கு முன்னாடியே தெரியும்" என்றாள் சர்வசாதாரணமாக
"ஒகே அது யாருனு சொல்லட்டுமா" என்று புருவம் தூக்கி காட்ட
" எங்க சொல்லு சொல்லு" என்றாள் ஆர்வமாக
"அந்த பேய்யே நீ தான் டி முட்டகண்ணு " என்று கூறிவிட்டு சிரிக்க அவளோ முறைத்துக் கொண்டே சென்று தன் முகத்தை கழுவிட்டு வந்து டிவியை ஆன் செய்ய
அஷ்வின்"இம்ச டிவிய ஆப் பண்ணிட்டு தூங்கு" என்க
" எனக்கு இப்போ தூக்கம் வரல..நீ வேணும்னா ஹால்க்கு போ " என்றான்
"ஏய் நான் எதுக்கு டி போகணும்... இந்த ரூம்க்கு முதல்ல வந்தது நான் தான்...நீ தான் போகணும் போடி" என்றான் லேப்டாப்பை கவணித்தவாறு
" என்னால போக முடியாது" என்றாள் தெட்டத் தெளிவாக
அஷ்வின்" சரிய் இங்கேயே இருந்து தொல ஆனா அந்த டிவிய மட்டும் ஆப் பண்ணு " என்றான் கெஞ்சும் குரலில்
"முடியாது... எனக்கு இப்போ படம் பார்க்கணும் போல இருக்கு" என்று சேனலை மாற்றிவிட்டு சோபாவில் காலை உயர்த்தி மடித்தவாறு தனக்கு வசதியாக அமர்ந்து கொண்டாள்
அறையில் ஜன்னல் வழியாக தீடீரென காற்று வீசத் தொடங்க....அஷ்வின் எழுந்து மூடப்போக சஞ்சனா அவனை நிறுத்தினாள்
"மறுபடியும் என்னடி..." என்றான் கடுப்பாக
" ஜன்னல மூடாதீங்க.....தற்கொல பண்ணி செத்துப்போன என் பிரண்டு இங்கு தான் சுத்திட்டு இருக்கா " என்று கூறி பொய்யாக அழுதாள்
" என்னது பிரண்ட் டா.... அதுவும் இறந்துபோன ஏய் யாருடி " என்று ஜன்னல் வழியாக தலையை போட்டு இருபக்கமும் பார்க்க யாரும் இல்லை... காற்றின் வேகத்தில் மரங்கள் சரசரவென அசைய இருட்டிய வெளியில் அவனுக்கோ தானாக பயம் மனதை வருட்டியது
ESTÁS LEYENDO
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை