அத்தியாயம் 9

3.1K 126 16
                                    

மீரா மற்றும் அவளது தோழிகள் ஜீவா பார்க்கிற்கு உள்ளே சென்று... மூவரும் கதைத்தபடியே நடை போட்டனர்

"ஸீ ப்ளூ கலர் டீ-ஷர்ட் போட்டு யாராவது நின்னா சொல்லுங்க டி
அவன் கிட்ட தான் என்னோட மொபைல் இருக்கு "என்றாள் மீரா

"அதோ அங்க இருக்காரு டி என்று சுஜி கையால் காட்ட அவளது கை நீட்டியிருந்த திசையை பார்த்தனர்" மீரா மற்றும் கவிதா

"பார்த்தா அர வயசு ஆளு மாதிரி இருக்காரு டி வா போய் பார்கலாம்" என்று கவிதா கூற அவளை பின் தொடர்ந்து மீரா மற்றும் சுஜி அந்த நபருக்கு அருகில் சென்றனர்

"உன்னோட மொபைல் இவரு கிட்ட தானா இருக்கு" என்று மீராவை பார்த்து கேள்வியை எழுப்பினாள் சுஜி

"எனக்கு எப்படி டி தெரியும் அவன் ஸீ ப்ளூ கலர் டீ-ஷர்ட் தான் போட்டுட்டு வரான்னு சொன்னான் நம்ம கண்ணுக்கு எட்டிய தூரம் வர வேற யாரும் அந்த கலர்ல டிரெஸ் பண்ணி இல்ல... சும்மா போய் கேட்டு பார்க்கலாம் வா "என்றாள் மீரா

"அதுவும் சரி தான் ஆனா அந்த ஆளு ஒரு மாதிரி இருக்கான் டி" என்று பயந்தவாறே கூறினாள் கவிதா

"இப்படியே நின்னுட்டு இருந்தா சரி வராது வா போய் பேசலாம்" என்று தைரியமாக அந்த நபருக்கு மிக அருகில் சென்றாள் மீரா மற்றும் அவளது தோழிகள்

அந்த நபர்" யாரு நீங்க... நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கேன் ...என்ன பார்த்து பார்த்து ஏதோ உங்களுக்குள்ளே பேசுகுறீங்க " என்க

மீரா" என்னோட பேரு மீரா.. நீங்க சொன்ன மாதிரி நாங்க ஜீவா பார்க்கு வந்தாச்சு என்னோட மொபைல்ல குடுங்க " என்றாள் தயங்கியபடி

அந்த நபர்" என்ன மொபைல் ...என்ன பேசுறீங்க" என்க

சுஜி" உங்க கிட்ட இருக்கிறது ... எங்க மீராவோட மொபைல் இப்போ அந்த மொபைல்ல குடுக்க போறீங்களா இல்லையா" என்று சற்று கோபமாக கூறினாள்

மீரா"ஹேய் சுஜி கொஞ்சம் இரு டி...சார் கிட்ட நான் பேசிகிறேன்" என்க

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Wo Geschichten leben. Entdecke jetzt