விகாஷ் தன் பிடியில் மீராவை வைத்தவனாய் தனது தலையில் விழுந்தது எது என்று ஆராய்ய பூவிதழ்கள் மிஞ்சிய கூடை கீழே கிடந்தது
" இது தான் என் தலையில விழுந்திச்சா...?" என மூலை குழம்பியதில் மீராவின் கண்கள் அவனை கட்டியெடுக்க எந்த வித யோசனையும் இன்றி அவளது விழிகளில் சரண்டர் ஆனான்
அருன்" அய்யோ இப்படி ஆகிடுச்சே...சரிய் யானையே போயிருச்சு வால மட்டும் எதுக்கு புடிச்சிட்டு இருக்கோம் பேசாம கீழ இறங்கிட வேண்டியது தான் "என்று மரத்திலிருந்து இறங்க நினைத்தபடி கீழ் கிளையில் கால் வைக்க மறைந்திருந்து சுஜி ஏதோ தனக்கு சொல்ல வருவது போன்று தெரிந்தது
அது என்ன என்பதை கைகளால் கேட்க அவனுக்கோ தெளிவாகவில்லை ... பின் போன் போடுமாறு சைகை செய்ய அவளும் அழைப்பை விடுத்தாள்
அருன்" சொல்லு டி ஜப்பனீஸ் சப்பாத்தி என்ன மேட்டர் " என்க
சுஜி" உன் வாயில அரைச்ச மாவ அள்ளி போட....காரியத்த சொதப்பிட்டு மரத்திலிருந்து கீழ இறங்க பார்க்குறியா .....விகாஷ் கெளம்புற வரைக்கும் மேலேயே இரு " என்றாள்
அருன்" ஹேய் என்னா .....ஹெல்ப்னு வந்து கேட்டியே ஏதோ மீராக்காக மரத்துல தொங்கிட்டு இருந்தா ஓவரா பேசுற என்னா " என்று குரலை ஏத்த
சுஜி" அட சீ ஓவரா சீன் போட்டுட்டு ஒழுங்கா பண்ணியா நீ போடா டேய்" என்க
கவிதா சுஜியிடம் போனை பிடுங்கி பேசினாள்
அருன்" ஹேய் யானைக்கும் அடி சறுக்கும் அது தெரியுமா.... நான் என்னமோ வேணும்னே சொதப்பின மாதிரி பேசுது அந்த சைனா சிக்கன் ....அவளோட வாய்க்கே கீழ குதிக்கிறேன் நானு"என்று எகிற
கவிதா" வேணாம் வேணாம் நீ இது வரைக்கும் பண்ணினதே போதும் இதையும் பண்ணி சொதப்பாதே.... டேய் அருன் ஒனக்கு தான் சுஜிய பத்தி தெரியும்ல எதுக்கு கோச்சிக்குற நீ விகாஷ் போனதும் கீழ இறங்கு ப்ளீஸ் " என்க
"ஏதோ நீ சொல்லுறதுக்கா..." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை