மூவரும் அந்த இடத்திற்கு சென்ற பின்....
இவர்களது பார்வை அந்த நபர் யாரென்று நோக்கியது அங்கே ஒரு இருபது வயது தோற்றத்தில் சல்வார் அணிந்து துப்பட்டாவை ஸ்டைலாக கழுத்தில் சுத்தியவாறு கண்களாலே சுட்டெறியும் பார்வையுடன் நின்று இருந்தாள் அந்த இளம் யுவதிவிகாஷ் பயத்துடனே இருந்தான் ஆனால் அந்த பெண்ணை பார்த்த பிறகு தான் அவளுக்கு பலமாக ஏதும் அடி படவில்லை என்பதில் நிம்மதியடைந்தான்
அந்த பெண்" ஹலோ இப்படி தான் அர போதையில வண்டி ஓட்டுவீங்களா " என்றாள் புருவத்தை உயர்த்தி
விகாஷ்" mind ur words நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டல" என்றான் கோவமாக
அந்த பெண்" அப்போ ஒனக்கு கண்ணு சரியா தெரியாதா " என்றாள்
விகாஷ்" ஹலோ மேடம் கொஞ்சம் மரியாதையா பேசுங்க" என்க
அஷ்வின்"டேய் என்னடா இது ச்சா " என்றான்
விகாஷ்"மச்சி நீ போய் கார்ல உட்காரு.. நான் பேசிட்டு வரேன்" என்றான்
அஷ்வின்" ப்ச் சரி சீக்கிரமா வா " என்று கூறிக் கொண்டே திரும்ப அங்கே சஞ்சனா நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்
அஷ்வின்" ஹேய் ஒனக்கு வேற தனியா சொல்லனுமா வந்து கார்ல உட்காரு" என்றான்
சஞ்சனா" சரிங்க"என்று மெதுவாக கூறிவிட்டு தன்னவனுடன் சென்று காரில் உட்கார்ந்து கொண்டாள்
அந்த பெண்"ஏய் எதுக்கு அவங்கள அனுப்பி வைச்சா" என்க
விகாஷ்" நான் தானே டிரைவ் பண்ணேன் நீ என்ன பேசனமோ அத என் கிட்ட பேசு" என்றான்
அந்த பெண்" ஒஹ் நீ இப்படி குரல ஏத்தியும் இறக்கியும் பேசினா நான் பேசாமா போய்டுவேனா " என்றாள்
விகாஷ்"அய்யோ சாமி...யாருடி நீ "என்று முணுமுணுத்துக் கொண்டே அவளை பார்த்தான்
அந்த பெண் இவனின் முன் சொடக்கு போட்டு " ஹேய் மிரியாதயா மன்னிப்பு கேளு" என்றாள் திமிராக
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை