"சஞ்சனா சாப்பிட வா மா எவளோ நேரம் தான் அந்த ரூம்க்குள்ளே கிடப்ப வா வந்து சாப்பிடு" என்று சஞ்சனா ரூம் கதவை தட்டிக் கொண்டிருந்தாள் பார்வதி
" எனக்கு பசிக்கல நான் அப்புறமா சாப்பிடுகிறேன் " என்றாள் கதவைத் திறக்காமல்
" என்னாச்சு இவளுக்கு" என யோசித்து விட்டு மீண்டும் கதவை தட்டி " உனக்கு புடிக்கும்னு மசாலா தோசை பண்ணியிருக்கேன் சூடு தணிய முன்ன வந்து சாப்பிடு " என்க
" ஏன் என்ன தொந்தரவு பண்ணுறீங்க.... எனக்கு சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம் தயவு செஞ்சு கொஞ்சம் தனியா இருக்க விடுறீங்களா ...ஒரு நேரம் சாப்பிடலனா செத்து போயிட மாட்டேன்" என்று கத்தினாள்
இவளது வார்த்தைகளில் அதிர்ந்த பார்வதி மேலும் எதுவும் பேசாமல் காலை ஆகும் வரை அமைதியாக இருந்தாள் ஒரு முடிவோடு
விக்னேஷ் , வித்யா இருவரும் சாப்பிட்டு விட்டு கையில் சாப்பாட்டு பார்சலுடன் அஷ்வின் வீட்டை அடைந்தனர்
" அண்ணா அண்ணி எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்" என்று கத்திக்கொண்டே உள்ளே சென்ற வித்யா முன் வந்து நின்றான் அஷ்வின் ராஜ்
" அண்ணா அண்ணி எங்க ரூம்ல இருக்காங்களா?" என கேட்டபடி உள்ளே செல்ல
விக்னேஷ் சாப்பாட்டு பொதியை மேசையில் வைத்துவிட்டு " நான் வரேன் " என்று சென்றுவிட்டான்
" அண்ணி ரூம்ல இல்லையே எங்க அவங்க" என்க
" சஞ்சனா வரல" என்றான் கனத்த குரலில்
" வரலையா எங்க போயிருக்காங்க " என்க
அஷ்வின் பெருமூச்சுடன் நடந்தவற்றை கூறி முடிக்க அவளோ சிலையென நின்றாள்
" அண்ணிக்கு வான்மதிய தெரியுமா? " என்க அவனும் ஆம் என்றான் சிறு தலையசைவுடன்
ஆங் நான் அவங்கள பார்த்த உடனே எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம் இருக்குன்னு சொன்னேனே அன்னிக்கு என் பிரண்ட பார்க்க ஹாஸ்பிடல் போனப்போ சஞ்சனா அண்ணியும் ஹாஸ்பிடல்ல இருந்தாங்க அது மட்டும் தான் ஞாபகம் இருக்குன்னு சொல்லி முடித்தாள் வித்யா
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை