அத்தியாயம் 3

4.6K 128 25
                                    

திருமணம் முடிந்த கையோடு எல்லோரும் சந்தோஷமாக இருக்க அஷ்வின் ராஜ் மாத்திரம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தான் இதனை ராமசாமி அறியாமல் இல்லை

விகாஷ்" டேய் அஷ்வின் உன்ன எங்க எல்லாம் தேடுறது ...அங்கிள் உன்கிட்ட என்னமோ சொல்லனுமாம்... உன்ன வரச் சொன்னாரு " என்க

அவனும் ராமசாமியிடம் போய் "என்னபா கூப்பிட்டாங்களா? "என்றான்

ராமசாமி" ஆமா பா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்றார்

அஷ்வின்" என்னப்பா சொல்லுங்க"என்க

ராமசாமி" இல்ல பா அது வந்து நான் எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்கு நான் செய்வேன் "என்க

அஷ்வின் சிரித்துக் கொண்டே"தெரியும் பா" என்றான்

ராமசாமி" சித்ராமன் என்னோட பள்ளிகூடத்து நண்பன் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம் அதுக்கு அப்புறம் நான் கோயம்புத்தூர்லையும் அவன் இங்கயும் செடில் ஆகினதால இத்தன வருசமா நான் அவன பார்க்கவே இல்ல அதுக்கான வாய்ப்பும் கிடைக்கல ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் சித்ராமன் வேல விஷயமா கோயம்புத்தூர் வந்த அப்போ எதேச்சையா மீட் பண்ணிக்கிட்டோம் " என்க

அஷ்வின்" தெரியும் பா "என்க

ராமசாமி" என்னோட நண்பன் பொண்ண உனக்கு கட்டிவச்சேன்ங்குறதுக்காக சொல்லல .. உண்மையியல நல்ல அடக்கமான பணிவாக பொண்ணு டா ..அந்த பொண்ண நீ கடைசி வரைக்கும் கைவிட்டுட மாட்டங்குற நம்பிக்கையில தான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்" என்றார்

அஷ்வின்க்கு என்ன சொல்லுவதென்று புரியவில்லை ஒரு நிமிடம் அவரது முகத்தை பார்த்து விட்டு தரையை பார்த்துக் கொண்டான்

ராமசாமி" என்னடா பேசாம இருக்க உன் கிட்ட கூட ஒரு வார்த்த கேக்காம நானே இந்த கல்யாணத்த பண்ணி வச்சேன்னு என் மேல கோபமா பா" என்க

அஷ்வின்"இல்ல பா அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீங்க எது செய்தாலும் என்னோட நல்லதுக்கு தான் செய்வீங்க" என்றான் கனத்த மனதுடன்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Donde viven las historias. Descúbrelo ahora