அத்தியாயம் 36

1.9K 115 52
                                    

அஷ்வின் முதலில் வர மாட்டேன்னு சொன்னாலும் அவனது பேச்சுக்கள் எடுபடவில்லை எனும் பட்சத்தில் இருவரும் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பினர்

மீரா" அம்மா நான் வெளிய போய்ட்டு வரேன்" என்று கிளம்ப

ராகேஷ் கையில் இருந்த பத்திரிகையை ஸ்டூலில் வைத்துவிட்டு " மீரா உள்ள போ" என்று கட்டளையிட

கோமதி"போயிட்டு வரட்டுமே" என்று மகளுக்காக பேசியவளின் வாயை அதிகாரம் மிகுந்த குரலில் அடக்கினார் ராகேஷ்

மீரா"அப்பா பிரண்ட்ஸ் ஸ மீட் பண்ண போறேன் போயிட்டு சீக்கிரமா வந்திடுவேன்" என்று மீண்டும் கிளம்ப முற்படுகையில்

கதிரையை விட்டு எழுந்தவர் " போக வேணாம்னு சொல்லுறேன்ல உள்ள போ மீரா" என்றார் அதே குரலில்

சற்று நிதானித்தவள் " ஏன் போக வேணாம்னு சொல்லுறீங்க.. நான் என்னோட பிரண்ட்ஸ் ஸ தானே மீட் பண்ண போறேன்... அதுவும் சீக்கிரமாகவே வந்துடுவேன்" என்க

"கோமதி அவள உள்ள கூட்டிட்டு போ" என்றார்

கோமதி " வா மா " என்று அவளது கையை பிடித்து இழுக்க

கொஞ்சம் விடு மா என்று தன் கையை விடுவித்து விட்டு "அப்பா ... சும்மா போக வேணாம் போக வேணாம்னா என்ன அர்த்தம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க" என்று நின்ற இடத்திலே அசையாமல்

"இன்னிக்கி ஈவினிங் உன்ன பொண்ணு பார்க்க வராங்க...அதனால எங்கேயும் சுத்தாம வீட்டுலையே இரு" என்றார் ராகேஷ்

மீரா" பா என்ன சொல்லுறீங்க...என் கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காமல் என்ன பா இது " என்றாள் அதிர்ச்சியுடன்

கோமதி " என்னங்க ... நீங்க என் கிட்ட நேத்து சொன்னப்போ கூட இப்படி திடுதிடுப்புனு வேண்டாம்னு சொன்னேனே அதுக்கு நீங்களும் ஒகே சொன்னீங்களே இப்போ என்னடான்னா இன்னிக்கி ஈவினிங் வர்ரதா சொல்லுறீங்க" என்க

மீரா" அம்மா உனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா... ஏன் என் கிட்ட சொல்லல" என்க

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Wo Geschichten leben. Entdecke jetzt