அத்தியாயம் 29

2K 85 21
                                    

ஒரு கையில் தக்காளியும் மறு கையில் மிளகாய் தூள் டப்பாவையும் வைத்தவனாய் சமயல்கட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் விக்னேஷ்

அஷ்வின் கோபமாக உள்ளே வர இவனது நிலையைக் கண்டு "அண்ணா என்ன பண்ணுறீங்க?" என்றான்

விக்னேஷ்" சமைக்க போறேன் " என்க

"நீங்களா..." என்றான் வியப்பாக

விக்னேஷ்" ஆமா ஆனா இதுக்கு ஏன்டா கரண்ட்டு கம்பில பட்ட காக்கா மாதிரி பார்க்குற" என்றான் நக்கலாக

"இல்ல நீங்க ஏன் சமைக்குறீங்க... அதான் சஞ்சனா மீராலாம் இருக்காங்களே " என்றான்

"நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்காங்க அவங்க....அதனால வாய்க்கு ருசியாக சமைத்து போடுவது என் கடமை " என்றான்

"இருந்தாலும் அண்ணா...சரி இருங்க நான் போய் ஹோட்டல்லால ஏதாவது வாங்கிட்டு வரேன்" என்று செல்ல முற்படுகையில்

"ஒரு நிமிஷம் அஷ்வின்" என்க

"என்ன" என்பது போல பார்க்கும் போதே சஞ்சனாவும் வந்து சேர்ந்தாள் அவ்விடத்திற்கு

விக்னேஷ்" ஹோட்டல் சாப்பாடு தாத்தாவுக்கு ஒத்து வராது.. வெஜிடபிள்ஸ் எல்லாம் வீட்டுலையே இருக்கே அதனால சமச்சிட்டா போச்சு... நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க இன்னும் அரைமணி நேரத்துல டின்னர் ரெடி" என்றான்

சஞ்சனா" சரி அண்ணா ... இருங்க நானும் ஹெல்ப் பண்றேன்" என்று கிச்சனுக்குள் செல்ல

"அய்யோ சமைக்கிறது பெரிய வேலையே கிடையாது அதனால என்னால தனியா மேனேஜ் பண்ணிக்க முடியும்... நீங்க போய் உட்காருங்க" என்க

சஞ்சனா" ப்ச் இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல சோ அஷ்வின் நீ அண்ணாக்கு ஹெல்ப் பண்ணு நானும் மீராவும் வெளிய இருக்கோம்" என்க

மீரா கையை தட்டிவிட்டபடி வர அஷ்வினோ " எவ இவ " என்ற முகபாவனையில் அவளை பார்த்தான்

மீரா" சூப்பர் இன்னிக்கி டின்னர் அட்டகாசம் தான் வாங்க கா நாங்க போலாம்" என்று சஞ்சனாவை இழுக்க

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now