அத்தியாயம் 11

2.9K 118 37
                                    

மீராவின் மொபைலிற்கு அழைப்பு வர அட்டன் பண்ணி பேசிக் கொண்டே சிறிது தூரம் சென்றாள் ..

அருன் சுஜியிடம் வம்பு இழுக்க அவளும் பதிலுக்கு அவனுடன் சண்டையிட தொடங்கினாள்

கவிதா" இதுங்க ரெண்டும் திருந்தவே திருந்தாது " என்று கூறியவாறு இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்

விகாஷ் ரொம்ப நேரமாக கவணிக்க அஷ்வின் ஒரு வார்த்தை கூட சஞ்சனாவிடம் பேசவில்லை ...சிஸ்டர் கிட்ட இவன‌ எப்படி பேச வைக்கிறது என்று எண்ண ...
அஷ்வின் சிறிதும் அவளை கண்டுகொள்ளாமல் விகாஷிடம் மாத்திரம் கதைத்துக் கொண்டு வந்தான்

விகாஷ்" டேய் மச்சி நான் urgent ah ஒரு கால் பண்ண வேண்டி இருக்கு... நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் வரேன்" என்று மெதுவாக நகர

அஷ்வின்"ஹ்ம் ஒகே சீக்கிரமா வா" என்று கூறிவிட்டு அங்கே அமர்வதற்காக போடப்பட்டு இருந்த கருங்கல் கதிரை மீது அமர்ந்து கொண்டான்
சஞ்சனா நின்ற நிலையில் அவன் அருகில் நின்று கொண்டு இருந்தாள்

மீரா பேசி முடித்த பிறகு அழைப்பை துண்டித்து விட்டு தன் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது ஒருவன் அவள் தோளை இடித்துக் கொண்டே செல்ல கோபம் தலைக்கேறியது மீராவிற்கு

"ச்சே " என்றவாறு தன் தோளை தட்டிவிட்டபடி அவளை இடித்துக் கொண்டு சென்றவனை சொடக்கிட்டு அழைத்தாள் .... அவனும் இவளுக்கு மிக அருகிலேயே வந்த நின்றான்

மீரா" வேணும்னு தானே என்ன இடிச்சிட்டு போன " என்க

அவன்"இல்லங்க தெரியாம தான்" என்று மலுப்பினான்

மீரா"ஹேய் பொய் சொல்லாத வேணும்னு தானே என்ன இடிச்சிட்டு போன" என்று மீண்டும் கேக்க

அவன் தன் தலையை தடவியபடி ஆமாங்க உங்களுக்கு ஒகே வா என்றான் அசிங்கமான சிரிப்புடன்

மீரா" என்னடா சொன்ன.." என்று கொண்டே அவன் கன்னத்தில் பளார் என்று தன் கையை பதித்தாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now