கார் நின்ற உடன் அஷ்வின் தன் விழிகளை திறக்க மூவரும் ரியா ரெஸ்டாரன்ட்க்குள் சென்றனர்
விகாஷ்" மச்சி இந்த டேபிள்ல உட்காரலாம்"என்க
அஷ்வின் மற்றும் சஞ்சனா ஒரு சீட்டிலும் இவர்களுக்கு முன் விகாஷும் உட்கார்ந்து கொண்டான்
சஞ்சனா"ம்ம் ரொம்ப பெரிய ஹோட்டல் போல " என்று சுத்தி சுத்தி தன் கண்களை உலாவ விட்டாள்
அஷ்வின்"இதுக்கு முன்ன இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் நீ பார்த்ததே இல்லயா... எதுக்கு பட்டிக்காட்டுல இருந்து வந்த மாதிரி பிஹேவ் பண்ற " என்றான் கோபமாக
விகாஷ்"டேய் கொஞ்சம் சும்மா இரு டா.. இங்கேயும் ஆரம்பிக்காதே" என்க
அஷ்வின் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டான் சஞ்சனா முகம் சோர்ந்து போனது
விகாஷ்"இங்க பாரு மா அவன் சொல்லுறத கண்டுக்காதே அவன் எப்பவும் இப்படி தான்" என்று ஆறுதல் கூறினான்
சஞ்சனா"ஹ்ம் சரி அண்ணா" என்றாள்
விகாஷ் மூன்று சிக்கன் பிரியாணி ஓடர் பண்ண சுட சுட கொண்டு வந்து இவர்களது டேபிள் மேல் வைக்கப்பட்டது
இதே ரெஸ்டாரன்ட்க்கு மீரா மற்றும் அவளது தோழிகள் வந்து ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்
கவிதா"ஏய் மீரா அங்க என்ன தான்டி நடந்திச்சு " என்க
மீரா"ப்ச் என்ன டி நீ செம்ம பசி மொதல்ல பிரியாணிய ஒரு கட்டு கட்டனும் பா " என்று இவளும் மூன்று பிரியாணி ஓடர் செய்தாள்
சிறிது நேரம் கழிச்சு இவர்களது டேபிள் மீது கொண்ட வந்து வைக்கப்பட்டது
மீரா சாப்பிடுவதில் மும்முரமானால் இவள் சாப்பிடுவதையே கவிதா மற்றும் சுஜி பார்த்துக் கொண்டு இருந்தனர்
மீரா"அதான் உங்களுக்கும் பிரியாணி இருக்குல்ல அப்புறம் எதுக்கு நான் சாப்பிட்றத பார்த்துட்டே இருக்கீங்க...கண்ணு வைக்காமா மொதல்ல சாப்பிடுங்க டி " என்றான் வாயில் பிரியாணியுடன்
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை