நேரம் மதிய வேலையை தொட சித்ராமன் பார்வதி சாப்பிடுவதற்காக பணிவுடன் அழைக்க சஞ்சனா செல்ல அவளை தொடர்ந்து அஷ்வினும் மறுப்பேதும் தெரிவிக்காமல் கையை கழுவிட்டு உண்பதற்கு அமர்ந்து கொண்டான்
பார்வதி உணவு பறிமாற சஞ்சனா சாப்பிடுவதில் மும்முரமானாள் ஆனால் அஷ்வின் மாத்திரம் இன்னும் சாப்பாட்டில் கை வைக்கவில்லை
"மாப்பிள்ள கூச்சபடாம உங்களுக்கு வேண்டிய கேட்டு சாப்பிடுங்க " என்று சித்ராமன் கூற
அஷ்வின்"புளி சோறு கெடக்குமா " என்க "என்னது புளி சோறா" ? என்று சித்ராமன் கேட்க " ஆமா புளி சோறு தான் கெடக்குமா? இல்ல கெடக்கலனா சொல்லிடுங்க" என்று பளிச்சென்று பதில் கூறினான்
சஞ்சனா "என்னங்க நம்மல விருந்துக்கு கூப்பிட்டு என்னன்னமோ ஸ்பெஷலா சமச்சு வச்சிருக்காங்க நீங்க என்னடான்னா புளி சோறு கேக்குறீங்க" என்க
அஷ்வின் "அதெல்லாம் ஸ்பெஷலா தான் சமச்சு வச்சிருக்காங்க ஆனா எனக்கு தான் புளி சோறு சாப்பிடனும் போல இருக்கு என்ன பண்றது நமக்கு எது புடிக்குதோ அது கெடச்சா தானே விருந்து அவங்க குடுக்குறத சாப்பிட்டா அதுக்கு பேரு விருந்து கெடையாது" என்க
"மாப்பிள்ள பொதுவா கல்யாண கல்யாண மாப்பிள்ளக்கு விருந்து கொடுத்தா எல்லாரும் கறி மீனு முட்டனு தான் சமச்சு வைப்பாங்க அதான் நாங்களும் ஏற்பாடு பண்ணிருக்கோம் உங்களுக்கு எது புடிக்கும்னு கேக்காம சமச்சது தப்பு தான் சரி உங்களுக்கு என்ன வேணும்" என்க
"அதான் புளி சோறு" என்று பதில் அளிக்க "சரி மாப்பிள்ள இதோ எடுத்துட்டு வரேன் ஆனா புளி சோறு மட்டும் போதுமா இல்ல வேற ஏதாவது வேணுமா" என்க
அஷ்வின்" அப்பளம் " என்க சரி மாப்பிள்ள நான் எடுத்துட்டு வரேன் கொஞ்சம் இருங்க என்று கூறிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் பார்வதி
" ஏன்டா டேய் என் குடுப்பத்த அவமானப்படுத்துறதுக்காவே நீ வேணும்னு இப்படி எல்லாம் பண்ற உனக்காக பார்த்தா பார்த்து சமச்சு வைச்சா நீ திமிரு புடிச்சு போய் புளி சோறா கேக்குற எனக்கும் ஒரு நேரம் வரும் டா அப்போ இருக்க ஒனக்கு" என்று மனதால் கூறிவிட்டு சாப்பிட தொடங்கினாள்
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை