அத்தியாயம் 5

3.8K 120 26
                                    

சில மணி நேரங்களுக்கு பிறகு ஆறடிக்கு குறையாத உயரத்தில் கடும் நீல நிற டீ ஷட்டுடன் அதற்கு தோதாய் கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தன் தலை முடியை களைந்து அதனை சரிசெய்தவாறு மாடிப்படி இறங்கி வந்தான் ராஜ் அஷ்வின் ராஜ்

இவனை மென்மேலும் வசீகரித்து காட்ட சஞ்சனா ஒரு நிமிடம் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்

சித்ராமன்"வாங்க மாப்பிள்ள வந்து உட்காருங்க "என்று மரியாதையுடன் எழுந்து நின்றார்

அஷ்வின்"அய்யோ மாமா நீங்க மொதல்ல உட்காருங்க"என்று அவரை அமரச் செய்து அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான்

இவன் இப்படி தன் தந்தையிடம் மரியாதையாக நடந்து கொண்டது சஞ்சனாவின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது

பார்வதி காபி ட்ரே உடன் வர சஞ்சனா அதனை வாங்கி தன் கையால் எல்லோருக்கும் காபி கொடுத்தாள்

விகாஷ்" சிஸ்டர் காபி சூப்பர்"என்க

சஞ்சனா"அண்ணா ... காபி நான் போடல அம்மா தான் போட்டுச்சு "என்றாள்

சித்தார்த்"விகாஷ் அங்கிள் ... எங்க அக்காவோட காபி அம்மா போடுறத விட சூப்பரா இருக்கும்"என்றான்

விகாஷ்" அப்போ அஷ்வின் குடுத்துவச்சவன் தான்" என்று கூறிக் கொண்டே அஷ்வின் முகத்தை பார்க்க அவன் முறைத்துக் கொண்டு இருந்தான்

சஞ்சனா"நான் போய் டிபன் ரெடி பண்றேன்"என்று சிரித்துக் கொண்டே கிச்சன் பக்கம் நுழைந்தாள்

எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க அஷ்வின் மாத்திரம் கடமைக்காக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான் அவர்களிடம்

அரைமணி நேரம் கழித்து சஞ்சனா காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிள் மேல் கொண்டு வந்து வைக்கவும்
எல்லோரும் கைகளை கழுவிவிட்டு வந்து அமர அஷ்வின் மாத்திரம் சோஃபாவில் அமர்ந்தவாறே இருந்தான்

பார்வதி"மாப்பிள்ள வரலாயா மா"என்க

சஞ்சனா"கொஞ்சம் இரு மா நான் போய் பார்க்குறேன்"என்று ஹாலிற்கு சென்றவள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Tempat cerita menjadi hidup. Temukan sekarang