அத்தியாயம் 32

1.9K 80 20
                                    

அஷ்வின் உள்ளே செல்ல வித்யா அவனை கண்டதும் தயங்கியபடி எழுந்து நின்றாள்

அஷ்வின் அவளருகே வந்து "எதுக்கு எந்திரிச்ச முதல்ல உட்காரு" என்க அவளோ நின்ற நிலையிலேயே இருந்தாள்

சஞ்சனா" அச்சோ எதுக்கு இப்படி தயங்குறீங்க இது உங்க அண்ணன் வீடு... தயங்காம உட்காரு மா " என்று அவளை அமர வைத்தாள் கையை பிடித்து

அஷ்வின்" ஸாரி வித்யா... அந்தாளு மேல இருக்கிற கோபத்துல உன் கிட்டயும் கோபமாக நடந்துகிட்டேன் ஸாரி" என்றான் அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்தபடி

"அய்யோ அஷ்வின் இட்ஸ் ஓகே... நான் அப்பா கூட சண்ட போட்டுட்டு இங்க வந்துட்டேன்... நான் இங்க தங்களாமா? கொஞ்ச நாள் தான் அப்புறம் நல்ல ஹாஸ்டலா பார்த்து போயிடுவேன்" என்றாள் அதே தயக்கத்துடன்

அஷ்வின்" அந்தாளு இங்க வரமாட்டாருல " என்க அவளோ இல்லை என்று தலையை அசைத்தாள்

"அப்போ ஒகே ஹாஸ்டல் எல்லாம் வேணாம் நீ இங்க தாராளமா இருக்கலாம் நோ ப்ராப்ளம்" என சிரித்தபடியே கூறிவிட்டு
"வித்யா இன்னொரு விஷயம்" என்க அனைவரும் அவனை கேள்வியாக பார்த்தனர்

" அண்ணி முன்னாடி அஷ்வின் அஷ்வின்னு சொல்லாம அண்ணானு கூப்பிடு ஒகே" என்க

"இது தானா நானும் என்னமோ ஏதோனு பயந்துட்டேன்...கூப்பிட்டா போச்சு ஒகே அண்ணா" என்றான் புன்னகையுடன்

சஞ்சனாவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை பல்லை காட்டியபடி சிரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் அஷ்வினும் அவளை ஓரக் கண்ணால் பார்க்காமல் இல்லை

இதனை கவணித்த விகாஷ் "டேய் நான் ஒருத்தன் இங்க இருக்கேன் டா" என்றான் போலியான சலிப்புடன்
இவனை தவிர அங்கிருந்து மூவரும் சிரிக்க விக்னேஷும் வந்து சேர்ந்தான்

விகாஷ்" மீராவ வீட்டுல விட்டுட்டியா?" என்க

"ஆமா.." என்றான்

அஷ்வின்" என்னாச்சு அண்ணா" என்க
" அப்பப்பா மீரா வீட்டுல ரொம்ப கண்டிப்பு போல அவங்க அப்பா...என் கூட வர்ரத கண்டு யாரு இந்த பையன்.. இவரு கூட எப்படி என்று மூச்சு விடாம மீராவ வாசல் படி கூட மிதிக்க விடாம நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டே இருந்தாரு நான் தப்பினேன் பிழைத்தேன்னு ஓடி வந்துட்டேன் " என்றான் வித்யாவை கவணிக்காமல் அவளருகே இருந்தபடி

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now