இரவின் இருள் மறைந்து காலைப்பொழுதும் தெளிந்தது
அஷ்வின் தன் இமைகளை கசக்கிக்கொண்டே எழுந்து பார்க்க சஞ்சனாவை காணவில்லை அவள் இல்லாத சந்தோஷத்தில் குளித்து முடித்து விட்டு தனது அலுமாரியை புரட்டி தன் மனதிற்கு பிடித்த ஆடையை அணிந்து கொண்டு வெளியே வர"மாம்பழ நிறத்தில் பட்டுச்சேலை அணிந்து அளவான மேக்கப் இரு கைகளிலும் இரண்டு ஜோடி வளையல்கள் காதில் ஜிமிக்கி தோடு கழுத்தில் மெல்லிய மாலை என்று சர்வ இலட்சியமாக இவன் முன் தரிசனம் அளித்தாள்"சஞ்சனா
அஷ்வின்"ஏய் என்னடி இது கோலம் " என்க
ஒரு முறை தன் ஆடை மற்றும் அலங்காரத்தை சரி பார்த்தவளாய்" நல்லா தானே இருக்கு " என்றாள்
அஷ்வின்"நல்லா இல்லா கேவலமா இருக்கு போதுமா ? அது சரி எங்க கெளம்புறதுக்கு இப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்து நிக்குற " என்றான் வேண்டுமென்றே
சஞ்சனா"என்னங்க எதுவும் தெரியாது மாதிரி கேக்குறீங்க அம்மா வீட்டுக்கு தான்" என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு
அஷ்வின்"ஒஹ் நான் இன்னிக்கி கண்டிப்பா ஆஃபிஸ் போய் ஆகனும் என்னால வர முடியாது நீ வேணும்னா போய்ட்டு வா இல்ல அங்கேயே நில்லு அது உன் இஷ்டம்" என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு
சஞ்சனா"இல்லங்க நான் விகாஷ் அண்ணா கிட்ட சொல்லிட்டேன் இன்னிக்கி நீங்க ஆஃபிஸ் வர மாட்டீங்கனு அவரும் ஒகே நல்லபடியா போய்ட்டு வாங்கனு சொல்லிட்டாரு" என்க
அஷ்வின்" அவனுக்கு என்ன தெரியும் இன்னிக்கி எனக்கு இம்போர்ட்டன் மீட்டிங் இருக்கு" என்றான் கோவமாக
சஞ்சனா" உங்களுக்கு இன்னிக்கி எந்த மீட்டிங் உம் இல்லனு விகாஷ் அண்ணா சொன்னாரு" என்க
அஷ்வின்"ப்ச் ஏன்டி என் உயிர வாங்குற எனக்கு வர இஷ்டம் இல்ல போதுமா" என்க
சஞ்சனா" என்ன சும்மா வர மாட்டேன்னு அடம் பிடிக்கிற நீ மட்டும் வரல.... நீ என் கிட்ட கோவமா நடந்துக்குறத உங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்க அப்புறம் நீயாச்சு உங்க அப்பாவாச்சு " என்க
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை