அத்தியாயம் 39

1.8K 80 18
                                    

" அஷ்வின் சொல்லுங்க...எங்க அம்மா பேச்ச கேட்டு நான் சென்னைக்கு வராம இருந்திருந்தா மதி செத்திருக்க மாட்டாங்கள என்னால தான் .... வேணாம்னு வேணாம்னு சொல்ல சொல்ல அடம்பிடிச்சு போனேன் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலயே நீங்க தான் சொல்லணும் ஆங் நீங்க சொன்னீங்களே உங்களுடைய மதினு அப்போ நான் தான் உங்க மதியோட சாவுக்கு காரணம் நீங்களே என்ன கொன்று போடுங்க சரியா" என்றாள் வெறித்த பார்வையுடன்

" ஏய் பைத்தியமாடி நீ என்ன உலறிட்டு இருக்க" என்றான் அஷ்வின் அவளது தோளை உலுக்கி

அப்பொழுது சுயநினைவு வந்தவள் என்ன என்பது போல பார்க்க அவளது பார்வையை புரிந்தவனாய் " ஒன்னும் இல்ல நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு ... நான் வெளிய இருக்கேன் என்று கிளம்பிச் செல்ல முற்படுகையில்

"என்னங்க உங்களுக்கு எப்படி அந்த பொண்ண தெரியும்" என்றாள்

"இப்போதைக்கு அதைப் பற்றி எதுவும் பேச வேண்டும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் நீ தூங்கு " என்று கூறிவிட்டு சென்றான் இவளும் தலைவலி மண்டையை பிளக்க தூக்கி எழுந்தாள்

" நீயெல்லாம் அண்ணனா...இப்படி கால உதறி விடுவனு தெரிஞ்சு தான் நண்பன்னு ஒருத்தன வச்சிருக்கேன் என்னோட லவ்வுக்கு நீ ஹெல்ப் பண்ணலனா என்ன அவன் பண்ணுவான் " என்றான் விகாஷ்

" யாரு அவனா பார்கலாம் பார்கலாம்" என்றான் விக்னேஷ்

வெற்றி புன்னகையை உதிர்த்துவிட்டு அஷ்வின்க்கு போன் போட அவனோ போனை எடுக்கவில்லை மீண்டும் மீண்டும் போன் செய்ய கட் செய்து கொண்டே இருந்தான்

" என்னாச்சு இவனுக்கு" என்று யோசிக்க மெஸேஜ் ஒன்று டங் என்று வந்து விழுந்தது அதனை பார்க்க முன் விக்னேஷ் போனை பறித்தெடுத்து வாசிக்க தொடங்கினான்

"டேய் அறிவு கெட்டவனே...ஒரு மனுஷன் போன எடுக்கலனா ஏன்டா திரும்பத் திரும்ப போன் போட்டு உயிர வாங்குற அவன் அவன் இருக்குற நிலம புரியாம
மறுபடியும் போன் போட்ட அவளோ தான்" என்று அனுப்பியிருந்தான் அஷ்வின் இதனை வாசித்த விக்னேஷ் சிரிக்க அவனிடமிருந்து போனை வாங்கி மீண்டும் ஒரு நம்பரை அழுத்தினான்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Où les histoires vivent. Découvrez maintenant