"இது தான் சரியான நேரம்...இவனுங்க ரெண்டு பேரையும் அடிச்சு போட்டுட்டு அந்த பொண்ண காப்பாத்தலாம்... உடனே இறங்காதீங்க நான் சொல்லும் போது இறங்கினா மட்டும் போதும் ஓகே " என கூறினான் கார்த்திக்
பைக்கை ஓரமாக நிறுத்தியபடி சமயம் பார்த்து பதுங்கி பதுங்கி நடந்த இருவரும் அவ் வண்டிக்கு அருகே செல்ல மின்னல் வேகத்தில் பறந்தது வண்டி
"ஓஓஹ் ஷிட் " என நெற்றியை தேய்த்தவன்
" ப்ரோ வண்டிய எடுங்க நாமலும் அந்த வண்டிக்கு பின்னாலே போவோம்...நம்மலால முடியாவிட்டாலும் அவனுங்க எங்க அந்த பொண்ண கொண்டு போய் அடச்சு வைக்கிறானுங்கனு தெரிஞ்சு போலீஸ் கிட்ட சொல்லலாம் மத்தத அவங்க பார்த்துபாங்க ..." என விரைந்தான் அருண்
கார்த்திக் ஒடிச் சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தவன் தானும் மின்னல் வேகத்தில் பின்தொடந்து இவர்கள் செல்லும் இடத்தை அடைய
வித்யாவைக் கடத்தப்பட்ட வண்டியோ... ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாக இருந்த பழைய கால மண்டபத்தைச் சுற்றி இருந்த புதர் மறைவில் வாகனத்தை நிறுத்தி விட்டு நினைவின்றி இருந்த வித்யாவை... மண்டபத்தின் உள்ளே தூக்கிச் சென்றார்கள் இரு ஆண்கள்
"ப்ரோ " என்றான் அருண்
"உஷ் என்னன்னு சொல்லுங்க மெதுவா மெதுவா" என அவனை எச்சரித்தான் கார்த்திக்
" ப்ரோ ஒரு வேளை இவங்கள காப்பாத்த போய் நாமலும் மாட்டிக்கிட்டா " என்றான் அருண்
"அட இந்த வாயில நல்ல வார்த்தையே வராதா... அப்படியே மாட்டிக்கிட்டாலும் அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணிட்டு தான் சிக்கினாலும் சிக்குவோம் அப்போ தான் அந்த தோல்விலையும் ஒரு திருப்தி இருக்கும்" என்றான் கார்த்திக் தீர்க்கமாக
" முடியாது என்றாலும் முயன்று தான் தோற்போமே வாங்க " என்று சலித்துக் கொண்டான் அருண்
" டேய் விக்னேஷ் எங்கடா போற" என கத்தினான் விகாஷ்
" நீங்க எல்லாரும் உங்களால முடியுமான முயற்சி பண்ணுங்க... நான் என்னால முடிஞ்சத பண்ணுறேன் இதுக்கு மேல என்னால இங்க கைய கட்டிட்டு இருக்க முடியாது ... அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு " என சொல்லும் போது தன்னாலே கண்கள் கலங்கியது அவனின்
ESTÁS LEYENDO
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை