அத்தியாயம் 34

2.1K 87 27
                                    

வித்யா அறையில் இருந்து வெளியே வர ...சஞ்சனா தன் கழுத்தில் இருந்த மாலையை வாயில் கவ்வியவாறு சிரிப்புடன் மாடிப் படியை பார்த்துக் கொண்டிருந்தாள்

வித்யா" அண்ணியாரே! என்ன சிரிப்பெல்லாம் பலமா இருக்கு... சொன்னா நானும் சிரிப்பேன்ல " என்றாள் அவளருகே வந்து

சஞ்சனா வித்யா கையை பிடித்து நடந்தவற்றை கூறி முடிக்க அவளோ சத்தமாக சிரித்தே விட்டாள்

சஞ்சனா" உஷ் உங்க அண்ணன் வந்துட போறாரு" என்று அவளை அமைதிப் படுத்த சிரிப்பை நிறுத்தியபாடில்லை அவள்

சரியாக அஷ்வின் பின்கழுத்தை தடவியபடி மாடிப்படி இறங்கி வர...சஞ்சனா சிரிக்காதே என அவளது கையை பிடித்த நேரம் கஷ்டப்பட்டு வாயை அடைத்துக் கொண்டாள் வித்யா

அஷ்வின் " ஏய் வித்யா... எதுக்கு சிரிக்குற ?" என்றான் மாறாக சஞ்சனாவை முறைத்துக் கொண்டே

வித்யா" சிரிக்க கூட முடியாத ?" என கேட்டுவிட்டு மீண்டும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியாக்கிளான்

அஷ்வின்" சிரிக்கலாம் ஆனா என்ன பார்த்து எதுக்கு சிரிக்குற?" என்றான் கோவமாக

சஞ்சனா" உ உங்களுக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு " என்றாள்

அஷ்வின்" தெரியுது ..." என கடுப்பாக கூறிவிட்டு ஆபிஸிற்கு பறந்தான்

வித்யா" ஸாரி அண்ணி...சிரிப்ப அடக்க முடியல அதான்...ஆனா அண்ணா " என்று இழுக்க

சஞ்சனா" இட்ஸ் ஓகே... உங்க அண்ணா இப்படி தான் ...என்னை மாதிரி கண்டுக்காம விடு" என்றாள்

அந்தி மாலை நேரம் ஆக.... அஷ்வின் ஆபிஸில் இருந்து வீடு திரும்பியவன் வாசலில் காலடி எடுத்து வைக்க சிறு வித்தியாசத்தை உணர்ந்தான்

பிளவர் வாசில் வெறுமனே ரசனையின்றி வைக்கப் பட்டிருக்கும் பூக்களுக்கு பதிலாக பளீரென்று வெண்ணிற ரோஜாக்களின் நடுவிலே ஆங்காங்கே அடர் சிவப்பு நிற ரோஜாக்கள் கண் சிமிட்டி சிரித்தன

நேர் கோடாக கிடந்த சோபா செட் வட்டமாக மாற்றிப் போடப்பட்டிருந்தன

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now