சுவாசம் : 30

615 21 5
                                    

மறுநாள் காலை ஸ்ரீராம் கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்..

ஷ்ருதி எதிர் நாற்காலியில் வந்தமர்ந்தாள்‌...

அவனிடம் ஏதோ சொல்ல வந்து தயங்கியபடி இருப்பதை கவனித்தவன்..

‌"எதுவாயிருந்தாலும் சொல்லு ஷ்ருதி.. ஏன் தயங்குற.."

" உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்.."

'என்னவா இருக்கும்..?' என்று லேசான பதட்டம் உண்டானது.

"கேளு ஷ்ருதி.." என்றான் அதை வெளிக்காட்டாமல்

"நான் வேலைக்கு போகவா..?" என்றாள்

'நிம்மதியானான்...'

"என்ன திடீர்னு..?"

" இல்ல.. வீட்லயே சும்மா இருக்கறது போரிங்கா இருக்கு.. அதான் எதாவது வேலைக்கு போகலாம்னு தோணுது.."

"வேலைக்கு தான்‌ போகணுமா? ஏதாவது க்ளாஸ் போகலாம்ல.."

'எந்த உழைப்பும் இல்லாமல் சும்மா சாப்பிடவும் தூங்கவுமா இருக்கிறது குற்ற உணர்வா இருக்குனு உங்ககிட்ட சொல்ல முடியாதே.. என் கை செலவுக்கு உங்ககிட்ட பணம் கேட்கவும் எனக்கு எந்த உரிமையும் இல்லை.. ' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு,

"இல்ல எனக்கு வொர்க்கிங் எக்ஸ்பீரியன்ஸ் தெரிஞ்சுக்கனும்னு ஆசையா இருக்கு.. அதனால தான்"

"எதாவது ஜாப் வேக்கன்ஸி பார்த்து வச்சிருக்கியா..?"

"எனக்கு இங்க இருக்கிற கம்பெனிஸ் பத்தி எதுவும் தெரியாது... உங்களுக்கு தெரிஞ்ச கம்பெனில கேட்டு பாக்கறிங்களா..?"

"அப்ப நீ நம்ம ஆஃபிஸ்லயே வொர்க் பண்றியா..?"

ஒரு நிமிடம் யோசித்தவள்..

"சரி.. ஆனா நம்ம உறவ பத்தி ஆஃபிஸ்ல யாருக்கும் தெரிய வேண்டாமே.."

"ஏன்?" என்றான் உணர்ச்சியற்று

" நானும்‌ எல்லாரையும் போல ஒரு சாதாரண ஸ்டாஃப்பா வொர்க் பண்ண ஆசப்படறேன்.. அவங்களுக்கும் எனக்கும் எந்தவித பாகுபாடும் இருக்க வேண்டாம்.. என்ன பத்தின‌ உண்மை தெரிஞ்சா எல்லாரும் என்கிட்ட டிஸ்ட்டன்ஸ் மெய்ன்ட்டைன் பண்ணுவாங்க அதனால தான்.."

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now