சுவாசம் : 12

3K 122 76
                                    

                           தினம் காலையில் கண் விழித்ததும் ஜாகிங் செல்ல வேண்டும்  என்பதே ஸ்ரீராம்  நினைவுக்கு முதலில் வரும் ஒன்று.. சமயம் மீறிப் போனால் வீட்டிலிருக்கும் treadmillலில்லாவது சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு தான் அந்த நாளை தொடங்குவான்.. 

ஆனால் இன்றோ அவன் வழக்கம் மாறிப் போனது..

'என் தேவதையும்  ஷ்ருதியும் ஒரே பெண்தானா என்று உறுதி செய்ய வேண்டும்' என்பதிலேயே அவன் எண்ணமெல்லாம் இருந்தது..

படக்கென்று கட்டிலை விட்டு எழுந்து ரெஃப்ரெஷ் செய்துவிட்டு பாட்டி கொடுத்த ஃபோட்டோவை தேடினான்..

'அந்த கவர எங்கே தூக்கி போட்டோம்..? ஞாபகம் இல்லையே..' என்று ஒவ்வொரு இடமாக தேடினான்..

அவனது கட்டிலுக்கு அருகிலிருந்த டேபிளுக்கு கீழே கிடந்தது..

அதை எடுத்துக் கொண்டு தன் அறையை அடுத்து இருந்த தனது சிறிய ஆஃபிஸ் ரூம்க்கு வந்து  லேப்டாப்பை எடுத்து அந்த தேவதையின் ஃபோட்டோக்களை  சேமித்து வைத்த folderரை திறந்து அதில் இருந்த நிறைய புகைப்படங்களில் ஒன்றை டபுள் க்ளிக் செய்ய அந்த புகைப்படம் பெரிதானது..

அந்த தேவதையின்  முகத்தை சற்று நேரம் ரசித்தான்..
"ஓக்கே.. ஸ்ரீராம்.. பாத்தது போதும்.. ஃபர்ஸ்ட் டௌட் க்ளியர் பண்ணு.."என்று தன்னை கட்டுபடுத்தினான்

அவனது செயல் அவனுக்கே சிரிப்பாய் இருந்தது.. யாருக்கும் இப்டி ஒரு நிலைமை வரக்கூடாதுப்பா என்று எண்ணிக் கொண்டே கண்ணை மூடி 'இரண்டும் ஒரே பெண்ணாய் இருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டே அந்த புகைப்படத்தை கவரை விட்டு எடுத்தான்..

மெல்ல தன் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தான்.. பின் மறு கண்ணையும் திறந்து விழி விரிய அதையே பார்த்துக் கொண்டிருந்தான்..
இரண்டிலும் ஷ்ருதியே இருந்தாள்.. அதே கண்கள்.. அதே வளைந்த புருவம்.. அதே கூர் நாசி.. அதே சிவந்த  இதழ்கள்.. சற்றே மலர்ந்த இதழ்களின்  மாறாத  புன்னகை..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now